கல்பிட்டியில் ஐ.தே.க. வென்றால் கல்பிட்டியை சேர்ந்தவரே சேர்மன்..!! அமைப்பாளர் நஸ்மி தீர்மானம்

· · 494 Views

 

புத்தளத்தின் புராதன  நகரான கற்பிட்டிக்கு, அது  21  வருடங்களாக இழந்து தவிக்கும் பிரதேச சபைத் தலைவர் பதவி இம்முறை அப்பிரதேஷத்தில்  வெல்லக் கூடிய முஸ்லிம்ஒருவருக்கே வழங்கப்படும் என ஐக்கியத் தேசியக் கட்சியின்  அமைப்பாளர் எம்.என்.எம். நஸ்மி  தீர்மானித்துள்ளதாக  செய்திகள்  கூறுகின்றன.

 

 

 

கடந்த  காலங்களில்   கல்பிட்டியின் பிற பிரதேசத்தவர்களே  கல்பிட்டியின்  பிரதேச  சபைத்  தலைவராக  செயற்பட்டுள்ளதால்  இம்முறை  அந்த  சந்தர்ப்பத்தை  மீண்டும்  கல்பிட்ட்கே  வழங்குவதற்கு  தீர்மானம்  எடுக்கப்பட்டுள்ளதாக  தெரிய  வருகிறது.

 

 

 

 

கடந்த  காலங்களில்  புத்தளத்தின்  துறைமுக  பிரதேசமான  கல்பிட்டியானது  அபிவிருத்தி  மற்றும்  வேலை  வாய்ப்புக்களில்  பெரியளவில்  பின்தங்கி  இருந்தமையானது  அப்பகுதி  மக்களின் பண்பாட்டு  மற்றும்  வாழ்வாதரா  வளர்ச்சிகளில் பெரும்  சிக்கலைத்  தோற்றுவித்தது  என்பது  குறிப்பிடத் தக்கது.

 

 

இதனாலேயே  அமைப்பாளர் எம்.ஏன்.எம். நஸ்மி  இந்த  முடிவை  ரகசியமாக  எடுத்துள்ளதாக  அறிவிக்கப்படுகிறது.

 

 

எனினும், இந்தச் செய்தி பற்றி   அமைப்பாளர் நஸ்மியோ  அல்லது  அவரின்  சார்ப்பாக  பேச  வல்ல எவருமோ  ஊர்ஜிதப்படுத்தவில்லை  என்பதும்  குறிப்பிடத் தக்கது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published.