கல்பிட்டியில் ஐ.தே.க. ஆட்சி உறுதி – U.N.P. ,S.L.F.P. ,S.L.M.C ஜம்போ கூட்டணியை அமைக்கிறார் நஸ்மி

· · 1278 Views

ஆர்.ரஸ்மின்

 

 

புத்தளம் மாவட்டத்தில் கற்பிட்டி பிரதேச சபையில் ஏனைய கட்சிகளையும் இணைத்துக் கொண்டு ஆட்சியமைக்கப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

 

 

 

 

கற்பிட்டி பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸூடன் இணைந்து போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சி, 11392 வாக்குகளைப் பெற்று 8 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
அத்துடன், குறித்த சபைக்கு போட்டியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 11858 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 11769 வாக்குகளைப் பெற்று 6  ஆசனங்களையும் பெற்றுள்ளது.
அத்துடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7352 வாக்குகளைப் பெற்று இரண்டு ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது.
இதற்கமைய கற்பிட்டி பிரதேச சபையில்  ஐக்கிய தேசியக் கட்சிக்கு 3 போனஸ் ஆசனங்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 4 போனஸ் ஆசனங்களும், ஸ்ரீலங்கா பொதுஜன  பெரமுனவுக்கு ஒரு போனஸ் ஆசனமும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு 2 போனஸ் ஆசனங்களும் வழங்கப்பட்டுள்ளன.
அத்தோடு, வன்னாத்துப் பூச்சி சின்னத்தில் போட்டியிட்டு 870 வாக்குகளைப் பெற்ற ஐக்கிய சமாதான ௯ட்டமைப்புக்கும், மீன் சின்னத்தில் சுயேட்சையாக களமிறங்கி 1378 வாக்குகளைப் பெற்ற சுயேச்சைக் குழுவுக்கும் தலா ஒவ்வொரு போனஸ் ஆசனமும் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சி 11 ஆசனங்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய இரு கட்சிகளும் தலா 7 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 4 ஆசனங்களையும், ஐக்கிய சமாதான ௯ட்டமைப்பு மற்றும் சுயேட்சைக்குழு என்பன தலா ஒவ்வொரு ஆசனங்களையும் பெற்றுள்ளன.
எனவே, ஒவ்வொரு கட்சிகளும் பெற்ற ஆசனங்களின் அடிப்படையில், கற்பிட்டி பிரதேச சபையில் எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலை காணப்படுகிறது. ௯ட்டாக இணைந்தே ஆட்சியமைக்கும் அதிகாரத்தைக் கோர வேண்டியுள்ளது.
இதற்கிணங்க, கற்பிட்டி பிரதேச சபையில் 11ஆசனங்களைப் பெற்றுள்ள ஐ.தே.க. ஆட்சி அமைக்கும் அதிகாரத்தைக் கோரவுள்ளதாக புத்தளம் தொகுதி அமைப்பாளர் எம்.என்.எம்.நஸ்மி தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைப்பதற்கு , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் உயர்மட்டப் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய சமாதான ௯ட்டமைப்பு மற்றும் சுயேட்சைக் குழு சார்பில் தெரிவான இரண்டு உறுப்பினர்களும் ஐ.தே.கவுடன் இணைந்து செயற்படுவதற்கு பூரண விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு ௯ட்டுக் கட்சிகளின் இணைவால் கற்பிட்டி பிரதேச சபையில் 21 உறுப்பினர்களுடன் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைக்கப் போவதாகவும், கற்பிட்டி பிரதேசத்தில் ஐ.தே.கவுக்கு மக்கள் வழங்கிய ஆதரவுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் மேலும் ௯றினார்.

 

Leave a Reply

Your email address will not be published.