கர்ப்பிணியாய் இருந்தும் புற்று நோயுடன் போராடி மகனைப் பெற்ற சபாநாயகரின் மகள் இந்திரா – காலமான இந்திராவின் கண்ணீர் கதை

· · 837 Views

சபாநாயகர் கருஜயசூரியவின் மகள் இந்திராவினால் வெளியுலகிற்கு கொடுத்த மகனின் தற்போதைய நிலை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

 

 

 

சபாநாயகர் கரு ஜயசூரிய தனது பேரனைத் தூக்கி வைத்திருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இதுகுறித்து பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

 

 

 

இலங்கையின் சபாநாயகர் கரு ஜயசூரியவின் மகளின் மரணம் மிக அதிகமாக பேசப்பட்டது.

 

 

தாய்மையை வெளிப்படுத்தும் வகையில் அவரின் மரணம் மக்களின் மனங்களை நெகழச் செய்தது.

 

 

 

புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த இந்திரா ஜயசூரிய, அவரது மகன் வயிற்றில் இருக்கும் போதே மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார்.

 

 

 

 

புற்றுநோயால் பீடித்திருந்த இந்திரா, கர்ப்பமுற்ற நிலையில், குழந்தையை குறை மாத நிலையில், சத்திரசிகிச்சைச் செய்து வெளியே எடுக்க மறுத்திருந்தார். தனது குழந்தை சரியான வளர்ச்சியோடு, பிறக்க வேண்டும் என பிடிவாதமாக இருந்தார்.

 

 

 

நீண்ட போராட்டத்தின் பின்னர் பிள்ளையைப் பெற்ற இந்திரா ஜயசூரிய, சிகிச்சைப் பலன்றி கடந்த வருடம் நவம்பர் மாதம் 2ஆம் திகதி உயிரிழந்தார்.

 

 

 

 

தேவி பாலிகா மகா வித்தியாலயம் மற்றும் புினத பிரிட்ஜட் கன்னிமடம் ஆகிய பாடசாலைகளில் இந்திரா ஜயசூரிய ஆரம்பக் கல்வியைப் பயின்றார். லண்டன் பிரட்பொரட் பல்கலையில் பொருளியல் கற்கைக்கான பட்டப்படிப்பை நிறைவு செய்திருந்ததோடு, பிரித்தானியாவில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.

 

 

 

 

பிரித்தானியாவைச் சேர்ந்த மார்ட்டின் டிக்கர் என்பவரை இந்திரா ஜயசூரிய திருமணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.