கம்பளை நகரின் மொஹமட் சல்மான் என்ற இரண்­டரை வயது சிறுவன் கடத்தல்..!! 30 லட்சம் கேட்கிறார்கள்

· · 465 Views

M.F.M.Fazeer

30 இலட்சம் கப்பம்  கோரி தொலைபேசி­ அழைப்பு

கம்­பளை நகரில்  இரண்­டரை வயது சிறுவனுடன்  இளைஞன் ஒரு­வரும் கடத்­தப்­பட்­டுள்­ள­தாக கம்­பளை பொலிஸ் நிலை­யத்தில் உற­வி­னர்­களால் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. அத்­துடன் கடத்தல் காரர்கள் இரு­வ­ரையும் விடு­விக்க தொலை­பே­சி­யூ­டாக 30 இலட்சம் ரூபா கப்பம் கோரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

mohamaed_salman

இதன்­போது மொஹமட்  சல்மான் என்ற இரண்­டரை வயது சிறுவனும்’ பது­ளை­யி­லி­ருந்து மருத்­துவ பரி­சோ­த­னை­யொன்­றுக்­காக வந்­தி­ருந்த குறித்த சிறுவனின் உற­வி­ன­ரான மொஹமட்  அஸாம் என்ற 23 வயது இளை­ஞ­னுமே கடத்­தப்­பட்­டுள்­ளனர்.

இச்­சம்­பவம் நேற்று முன்தினம் பகல் வேளையில் இடம்­பெற்­றுள்­ளது.

கடத்­தப்­பட்ட சிறுவனின் தந்­தைக்கு மதிய நேர உண­வினை எடுத்துச் செல்லும் வழியில் குறித்த கடத்தல் இடம்­பெற்­றுள்­ளமை விசா­ர­ணையில் தெரி­ய­வந்­துள்­ளது. அத்­துடன் இச்­சம்­வத்­துடன் தொடர்­பு­டைய 23 வய­து­டைய முஹம்மத் அசாம் என்ற பதுளை பிர­தே­சத்தைச் சேர்ந்த  இளை­ஞனே குழந்­தையை கடத்­தி­யி­ருக்­கலாம் என்றும் சந்­தே­கிக்­கப்­ப­டு­கின்­றது.

அத்­துடன் குறித்த இளைஞன் சுக­யீ­ன­முற்ற நிலையில் சிகிச்சை பெற்­று­வ­ரு­வ­தாக விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரி­ய­வ­ரு­கின்­றது.

சிறுவனை மீட்­கவும் சந்­தேக நபர்­களைக் கைது செய்­யவும் மூன்று விஷேட பொலிஸ் குழு­க்கள் நட­வ­டிக்­கையில் ஈடு­ப­டுத்­தப்பட்­டுள்­ள­தாக பொலிஸ் பேச்­சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரி­யந்த ஜய­கொடி தெரி­வித்தார்.

நேற்று முன் தினம் பிற்­பகல் 2.00 மணிக்கும் 2.30 மணிக்கும் இடைப்­பட்ட நேரத்தில், சிறுவனின் தந்­தைக்கு மதிய உண­வினை அவ­ரது வர்த்­தக நிலை­யத்­துக்கு அனுப்ப சிறுவனின் தாய் தீர்­மா­னித்­துள்ளார். வீட்­டி­லி­ருந்து சுமார் 100 மீற்றர்­க­ளுக்கு அப்பால் உள்ள குறித்த வர்த்­தக நிலை­யத்­துக்கு மதிய உன­வினை கொடுத்­து­விட்டு வரு­மாறு மொஹம்மட் அசா­மிடம்  சிறுவனின் தாய் கூறியுள்ளார்.

இந்நிலையில் உண­வினை குறித்த இளைஞன் வர்த்­தக நிலை­யத்­துக்கு எடுத்துச் செல்லத் தயா­ரான போது 2 வரு­டங்­களும் 8 மாதங்­களும் நிரம்­பிய சிறுவனும் அந்த இளை­ஞ­னுடன் வர்த்­தக நிலையம் செல்ல அடம்­பி­டித்­துள்­ளார். இத­னை­ய­டுத்து சிறுவனை தாய் அந்த இளை­ஞ­னுடன் அனுப்பி வைத்­துள்ளார்.

அவர்கள் வீட்­டி­லி­ருந்து புறப்­பட்டு சென்ற பின்­னரே குறித்த கடத்தல் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.  நீண்ட நேர­மா­கியும், உணவு வரா­ததால் மீள வீட்டை தொடர்­பு­கொண்டு கணவர் மனை­வி­யிடம் விசா­ரித்தபோதே சிறுவனும் இளை­ஞனும் கடத்­தப்­பட்­டுள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது.

சம்­பவம்  நடை­பெற்ற பின்னர் மதியம் 3.30 மணி­ய­ளவில் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய முஹம்மத் அஸாமின் தொலை பேசி­யூ­டாக குறித்த சிறுவனின் தந்­தையின் தொலைபேசிக்கு அழைப்­பொன்று ஏற்­ப­டுத்­தப்­பட்டு, இளை­ஞரும் சிறுவனும் நல­மாக இருப்­ப­தா­கவும் தாங்கள் மாலை 6 மணி­ய­ளவில் மீண்டும் தொடர்பு கொள்­வ­தா­கவும் கூறி தொலை பேசியை துண்­டித்து விட்­ட­தாக உற­வி­னர்கள் தெரி­வித்­தனர்.

எனினும்   மீண்டும் தொடர்பு கொள்­ளா­மை­யை­ய­டுத்து  இது குறித்து கம்­பளை பொலிஸ் நிலை­யத்தில்  முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது .இதேவேளை நேற்றைய தினம் மீண்டும் தொடர்பு கொண்ட கடத்தல்காரர்கள் 30 இலட்சம் ரூபாவினை கப்பமாக கோரியுள்ளனர்.

இதனடிப்படையில் கம்­பளை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்புப் பிரிவின் மூன்று சிறப்புக் குழுக்கள் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், குறித்த இளைஞனே சிறுவனைக் கடத்திச் சென்றிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.