கண்டி வன்முறைகளில் இருவர் பலி..!! பொலீஸ் மா அதிபர் கலவரப்பகுதிகளுக்கு விஜயம்

· · 350 Views

கண்டியில் ஏற்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்களினால் இருவர் உயிரிழந்துள்ளதுடன், எட்டு பேர் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பூஜாபிட்டிய, வேவெல்கடே பிரதேசத்தில் இன்று (07) ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தினால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதில் காயமடைந்தவர்கள் கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டுகஸ்தோட்டை, பூஜாபிட்டிய, சேனரத்கம, அபேதென்ன, உல்லதுபிடிய, மெனிக்கின்ன உள்ளிட்ட பிரதேசங்களில் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சொத்துக்களுக்கும் பாரிய தேசம் விளைவிக்கப்பட்டுள்ளது.

கண்டி நிர்வாகத்திற்கு உட்பட்ட பொலிஸ் பிரதேசத்தில் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் இன்று முற்பகல் அமுல்படுததப்பட்டுள்ளது. எனினும், இன்று மாலையும் வன்முறைச் சம்வங்கள் பதிவாகியுள்ளன.

பொலிசாரும், விசேட அதிரடிப்படையினரும், இராணுவத்தினரும் தொடர்ந்தும் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்த பாதுகாப்புத் தரப்பினருக்கு கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

மெனிக்கின்ன பிரதேசத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், இரண்டு பேர் நேற்று (06) காயமடைந்தனர். இவர்கள் கண்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

இதேவேளை, வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்ற சில பிரதேசங்களுக்கு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நேரடியாக பயணம் செய்துள்ளார்.

 

 

kandy 1

kandy 2

kandy 3

kandy 3

kandy 4

 

kandy 5

kandy 6

 

kandy 7

 

kandy 8

 

kandy 9

 

kandy 10

 

kandy 11

Leave a Reply

Your email address will not be published.