கண்டி ஏரியாவில் இதுவரை 160 முஸ்லிம் கடைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது..!! முஸ்லிம்களின் பொருளாதாரமே இலக்கு

· · 217 Views

கண்டியில் முஸ்லிம் பிரதேசங்களில் இனவாதக் கும்பல்கள் நடத்திய வன்முறையில் இதுவரை 160 முஸ்லிம் கடைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

 

 

அத்துடன், முஸ்லிம் பகுதிகளில் உள்ள 10 பள்ளிவாசல்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டு, சில பள்ளிவாசல்களுக்கு தீயும் மூட்டப்பட்டுள்ளது.

 

 

 

 

இதனால் பலநூறு கோடி ரூபா பெறுமதியான முஸ்லிம்களின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கண்டி முஸ்லிம் சமூகம் தெரிவித்துள்ளது.

 

 

நேற்று முன்தினம் ஆரம்பித்த இந்த வன்முறைச் சம்பவங்கள் நேற்று மாலை உச்ச அளவில் நடந்திருந்தன. இதனையடுத்து இன்று காலை 6 மணி வரை ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

 

 

கண்டி நிர்வாக மாவட்டத்தின் பாடசாலைகள் அனைத்திற்கும் இன்று விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இதேவேளை, கண்டி, தென்னகும்புர பகுதியிலும் நேற்றிரவு பள்ளிவாசல் ஒன்று தாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

 

 

கட்டுகஸ்தோட்ட பிரதேசத்திலும் சிற்சில சம்பவங்கள் நடந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

 

 

Kandy

Kandy2

Kandy23

Kandy24

Kandy25

Kandy26

Kandy27

Kandy28

Kandy29

Kandy210

Kandy212

Kandy213

Leave a Reply

Your email address will not be published.