கண்டியில் மீண்டும் கலவரம் !! ஊரடங்கு சட்டம் அமுல் – இணைய பாவனை, வலையமைப்பு சேவைகளும் கட்டுப்படுத்தப்பட்டன

· · 570 Views

கண்டியில் தற்போது பதற்றநிலை ஏற்பட்டுள்ளதோடு கண்டி நிர்வாக மாவட்டத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

இந்த ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் விடுக்கும் வரை அமுலில் இருக்குமென பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

 

 

 

இதேவேளை கண்டி மாவட்டத்தில் இணைய பாவனை, வலையமைப்பு சேவைகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

 

 

 

மேலும் பெருமளவான பொலிஸார் மற்றும் படையினர் கண்டி நகரத்து வரவழைக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

பள்ளிவாசல், கடைகள் மற்றும் மக்கள் குடியிறுப்புக்கள் மீது இன்று காலை முதல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

 

 

 

இதேவேளை பிரதி மா அதிபர்கள், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளை உள்ளடக்கிய மூன்று பொலிஸ் பிரிவுகளை உடனடியாக கண்டிக்கு அனுப்பி வைத்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.