கண்கள் குளமானதம்மா நாமலை பார்க்கையிலே : மகனைப் பார்த்து கண்ணீர் விட்டார் மகிந்த ராஜபக்ஷ !!

· · 495 Views

சிறை வைக்­கப்­பட்­டுள்ள தனது மகனை பார்­வை­யிடச் சென்ற முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ கண்கலங்­கி­ய­தாக தெரிவிக்கப்ப­டு­கின்­றது.

 

 

 

தந்­தை­யாக மகனின் நிலை­கண்டு தடு­மா­றிய மஹிந்த பெரும் கவலை அடைந்­த­தாக அவ­ருக்கு நெருக்­க­மா­ன­வர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

 

 

 

 

 

தங்­கா­லையில் சிறை வைக்­கப்­பட்­டுள்ள நாமலை, மஹிந்த ராஜபக் ஷவுடன் அவ­ரது மனைவி ஷிரந்தி ராஜபக் ஷ, யோஷித ராஜபக் ஷ ஆகியோர் நேற்று சென்று பார்­வை­யிட்­டனர்.

 

 

 

சிறைச்­சா­லையை விட்டு வெளியே வந்த மஹிந்த ஊட­கங்­க­ளிடம் கருத்து வெ ளியி­டு­கையில் “இந்த நாட்டு சொத்­துக்­களை விற்­ப­தற்கு எதி­ராக ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­ட­வர்கள் கைது செய்­யப்­ப­டு­கின்­றனர்.

 

 

 

விற்­பனை செய்ய முயற்­சிக்கும் துறை­முகம் மற்றும் விமான நிலை­யங்கள் மீது மக்­க­ளுக்கு உரிமை உண்டு.

 

 

 

இன்று வடக்கில் சட்டம் இல்லை. வடக்­கிற்கு தேவை­யான வகை­யி­லேயே சட்டம் உள்­ளது. இவர்கள் வாக்கு பெற வேண்டும் என்­ப­தற்­காக அப்­படி ஒன்றை செய்து கொடுத்­து­விட்டு பார்த்து கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

 

 

 

சுதந்­திரம் என்­பது இதுதான். இங்கு சிறைப்­ப­டுத்­தப்­ப­டி­ருப்­பது அப்­பாவி மக்கள். முஸ்லிம் பிள்­ளைகள், பாட­சாலை மாண­வர்க்ள, அப்­பாவி தாய்­மார்கள் இங்கு உள்­ளனர்.

 

 

 

இது ஒரு மிகப்­பெ­ரிய குற்­ற­மாகும்” இந்த நாட்டின் சொத்­துக்­களை விற்க வேண்டாம் என கூறி ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்ட நபர்­க­ளையே இந்த அர­சாங்கம் சிறையில் அடைத்­துள்­ளது.

 

 

 

அர­சாங்கம் இந்த நாட்டின் விமான நிலையம், துறை­மு­கங்­களை விற்­கவே முயற்­சித்து வரு­கின்­றது. ஆகவே இவற்றை தடுக்க மக்­க­ளுக்கு கடமை உள்­ளது.

 

 

 

எந்த வழி­யி­லேனும் இவ்­வா­றான செயற்­பா­டு­களை தடுக்க வேண்டும் என்றே நாம் நினைக்­கின்றோம். ஜே. ஆர் ஜெய­வர்­தன காலத்தில் கூட இவ்­வாறு போராட்டம் செய்­த­வர்­களை கைது­செய்­ய­வில்லை.

 

 

 

மேலும் நாட்டின் தேசிய பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்­த­லான வகையில் இந்த அரசாங்கம் தீர்மானங்களை எடுத்து வருகின்றது.

 

 

 

இதற்காக போராடிய காரணத்தினாலேயே எனது புதல்வர் இப்போது தண்டிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.