கட்டுநாயக்காவில் பெரும் நெருக்கடி..!! பயணிகளால் நிறைந்து வழியும் டேர்மினன்ல்கள்..!!

· · 885 Views

கட்டுநாயக்க பண்டரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விமான ஓடுபாதை  திருத்தப் பணிகள் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்ட நிலையில் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய ஏற்பாடுகள் காரணமாக விமான நிலையம் இன்று மாலை பயணிகளால் நிறைந்து வழிகின்றது.

katuna

கட்டுநாயக்க விமான நிலைய புனரமைப்பு பணிகளுக்கான முன் ஏற்பாடுகள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க பண்டரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விமான ஓடுபாதை  திருத்தப் பணிகள் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறீபால டி சில்வாவினால் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இன்று முதல் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி வரை இந்த நிர்மாணப்பணிகள் நடைபெறவுள்ளதால் காலை 8.30 மணிமுதல் மாலை 4.30 மணி வரையான 8 மணி நேரம் கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தக் காலப்பகுதியில் விமான நிலையத்தின் ஊடான சர்வதேச விமான பயணங்கள், மாலை 4.30 இல் இருந்து அடுத்த நாள் காலை 8.30 வரை இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில் தமது பயணங்களை மேற்கொள்வதற்கென அதிகளவிலான பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.

விமான நிலையத்தின் நிர்வாக நேர கட்டுப்பாடு காரணமாக பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்கும் வகையில் இன்று முதல் திகதி முதல் விமான நிலையத்தின் வெளிச்செல்லல் பிரிவின் வருகையாளர்கள் முழுமையாக மட்டுப்படுத்தப்படும் என்று அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை கட்டுநாயக்க விமான நிலைய புனரமைப்பு காரணமாக, உள்நாட்டு விமான பயணங்கள் இரத்மலானை விமான நிலையத்தின் ஊடாக இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்து நாட்டின் நிறுவனம் ஒன்றின் மேற்பார்வையின் கீழ் இரண்டு சீன நாட்டு நிறுவனங்கள் இந்த நிர்மாண பணிகளை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த நிர்மாணப்பணிகளுக்காக ஏழு பில்லியன் ரூபா செலவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.