” கட்டார் மன்னரின் வீட்டுக்குள் புகுந்து அவரை சிறை வைக்க வேண்டும்..எல்லையில் காத்திருக்கும் சவூதி படைகள் கட்டாருக்குள் நுழைய வேண்டும் !! கட்டார் அரசுக்கெதிரான ஒரு சதியின் கதை

· · 883 Views
தீவிரவாதிகளுக்கு உதவுவதாக குற்றம் சுமத்தி கத்தரின் வான், தரை, கடல் வழி தடங்களை முடக்கியுள்ள சவூதி, அமீரகம், பெஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் இணைந்து 1996 ஆம் ஆண்டு கத்தர் அரசைக் கவிழ்க்க நடத்திய சதி அம்பலமாகியுள்ளது.
Image may contain: one or more people
 
இது தொடர்பான ஆவணப்படத்தின் முதல் பகுதியினை அல் ஜஸீரா தொலைகாட்சி ஒளிபரப்பியது வளைகுடா நாடுகளில் மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
 
கத்தரின் முன்னாள் அமீர் ஹமத் பின் கலிஃபா பின் ஹமத் அல்தானி அரசு பொறுப்பேற்ற ஒரு ஆண்டுகாலத்தில், ஃபெப்ருவரி 14, 1996 ல் இச்சதியினை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
 
இத்திட்டத்திற்கு ஆபரேசன் அல் அலி என்று பெயரிட்டு கத்தரின் முன்னாள் அமீர் ஹமத் பின் ஜாஸிம் பின் ஹமத் அல்தானியின் நெருங்கிய உறவினராக இருந்த உயர் காவல் அதிகாரி மற்றும் சில இராணுவ அதிகாரிகளைக் கொண்டு இதனைச் செயல்படுத்த முனைந்துள்ளனர். திட்டத்தின்படி, அமீர் ஹமத் பின் கலிஃபா பின் ஹமத் அல் தானியின் வீட்டினுள் நுழைந்து அவரைச் சிறை வைக்க வேண்டும். அதன் பின் இராணுவத்தையும் காவல்துறையினையும் முடக்க வேண்டும். இவை முடிந்ததும் அவர்களுக்குத் தகவல் கொடுக்க வேண்டும். சவூதி எல்லையில் காத்திருக்கும் படைகள் கத்தரினுள் நுழையும் என்பதே திட்டம்.
Image may contain: 3 people, people smiling, closeup
இத்திட்டத்தை வகுத்தவர்கள்,
1. ஷேக் முஹம்மது பின் ஸாயித், – இவர் பின்னர் அமீரக ஆயுதப்படைக்குத் தலைவராகவும் தற்போது அபுதாபி பட்டத்து இளவரசராகவும் உள்ளார்
 
2. ஷேக் ஹமத் பின் இஸ்ஸா அல் கலிஃபா, பின்னர் பெஹ்ரைனின் பட்டத்து இளவரசரானார்
3. ஷேக் சுல்தான் பின் அப்துல் அஸீஸ், பின்னர் சவூதி பாதுகாப்புதுறை அமைச்சரானார்
4. உமர் சுலைமான், எகிப்தின் உளவுதுறை முன்னாள் தலைவராக பணியாற்றியவர் பின்னர் எகிப்தின் துணை அதிபரானார்
 
ஆனால் அவர்களின் இம்முயற்சி திட்டமிட்டபடி நடக்காமல் தோல்வியில் முடிந்தது.
 
அவர்கள் திட்டமிட்டபடி நடந்திருக்குமேயானால், கத்தர் எல்லையில் நுழையும் அவர்களின் படைகள் கத்தர் வீதிகளில் காணும் எவரையும் கொன்று தீர்த்திருக்கும் என கத்தர் முன்னாள் பிரிகேடியர் ஜெனரல் ஷஹீன் அல் சுலைதி தெரிவித்துள்ளார்.
இந்தச் சதி திட்டத்திற்கு உடந்தையாக இருந்தவர்களிடமிருந்து நேரடி வாக்குமூலம் பெற்று இந்த ஆவணப்படத்தை அல் ஜஸீரா தயாரித்துள்ளது.
 
இச்சதி திட்டம் நிறைவேற்ற திட்டமிடப்பட்ட நாள் புனித ரமலான் மாதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆவணப்படம் கண்டு அதிர்ச்சியை வெளிப்படுத்தியவர்கள்,
”புனித ரமலான் மாதத்தினையே புனிதமற்ற, இறை விரோதமான காரியங்களைச் செய்ய இவர்கள் தேர்வு செய்வது ஆச்சரியமாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளனர்.
தற்போதைய கத்தர் மீதான தடையும் கடந்த ஆண்டு புனித ரமலான் மாதத்தில் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. கத்தர் தமக்குத் தேவையான தினசரி உணவு பொருட்களில் சுமார் 80 சதவீதமும் சவூதி, துபையையே சார்ந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. திடீரென விதிக்கும் தடை மூலம், ரமலானில் உணவின்றி பொதுமக்கள் கலகத்தை உருவாக்குவதை இந்நாடுகள் லட்சியம் வைத்திருந்தன. ஆனால், கத்தர் இதனைச் சமயோஜிதமாக கையாண்டு சமாளித்தது. ரமலானில் உணவு தட்டுப்பாடு வந்து பெரும் பிரச்சனையில் சிக்கிய போதும் தம் வேண்டுகோளை ஏற்று ஒத்துழைத்த கத்தர் மற்றும் வெளிநாட்டு மக்களுக்குக் கடந்த கத்தர் தேசிய தினத்தில் கத்தர் அமீர் தமீம் பின் ஹமத் அல்தானி நன்றி தெரிவித்திருந்தார்.
(Abdur Rahman)

Leave a Reply

Your email address will not be published.