கட்டார் நாட்டின் தனியார் நிறுவன தொழிலாளர்கள் ஒன்லைனில் Employment Contract Copyஒன்றைப் பெற முடியும்…!!கட்டார் சமூக விவகார அமைச்சு மற்றுமொரு ஏற்பாடு

· · 603 Views
தற்போது கத்தார் நாட்டில் உள்ள தனியார் பிரிவு தொழிலாளர்கள் சேவைத் தளத்தின் மூலம் தங்கள் ஆன்லைன் ஒப்பந்தத்தின் நகல்  (Employment Contract Copy)ஒன்றைப் பெற முடியும்.
 
கத்தாரில் உள்ள தனியார் பகுதி தொழிலாளர்களுக்கு வேலை ஒப்பந்தத்தின் நகல் ஒன்றை வழங்குவதற்காக நிர்வாக, அபிவிருத்தி, தொழில் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சு மற்றொரு ஆன்லைன் நிர்வாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இதன் பொருள் தொழிலாளர்கள் மற்றும் தொழில்களின் மத்தியில் நேரடியாக தொடர்பு கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.ஒப்பந்தத்தின் நகல் ஒன்றை வாங்குவதற்கான நுட்பம் எளிதானது மற்றும் அரபிக் மற்றும் ஆங்கில மொழிகளில் அணுகக்கூடியது. இச் சேவையைப் பெற்றுக்கொள்ள 
கட்டார் ID எண் அல்லது விசா எண்ணை உள்ளிடவும். இரண்டாவது மொபைல் எண் உள்ளிடவும் (மொபைல் எண் உங்கள் பெயரில் பதிவு செய்து இருக்க வேண்டும்). உங்கள் கைத்தொலைபேசிக்கு ஒரு உறுதி எண்(OTP) வழங்கப்படும். கிடைத்த குறியீட்டை நீங்கள் பதிவு செய்வதன் மூலம் உங்கள் ஒப்பந்த நகளைப் பெற்றுக்கொள்ளலாம். உங்களால் ஒப்பந்த நகளைப் பெற முடியவில்லையென்றால் உங்களுடைய ஒப்பந்தம் நிறுவனத்தால் புதுப்பிக்கப்படவில்லை அல்லது இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை என்று அர்த்தமாகும். 
ஆங்கிலத்தில் :- The Paninsula
தமிழில் :– கத்தார் அப்டேட்)

Leave a Reply

Your email address will not be published.