கட்டார் அரசாங்கம் என்ன நோக்கத்தில் அமைச்சர் ரிஷாதுக்கு நிதியுதவி அளிக்கின்றது..? உடனடியாக விசாரிக்குமாறு அரசிடம் கோரிக்கை

· · 928 Views

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு உதவி வழங்கும் கட்டார் அரசாங்கத்திற்கும், அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கும் இடையில் இருக்கும் தொடர்பு என்னவென்பது தொடர்பில் அரசாங்கம் விரிவான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென சிங்கள ராவய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

 

 

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்த சுத்தாத்த தேரர், கட்டார் அரசாங்கம் என்ன நோக்கத்தில் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு நிதியுதவி அளிக்கின்றது எனவும் கேள்வி எழுப்பினார்.

 

 

 

மாகல்கந்த சுத்தாத்த தேரர் “கட்டார் நாட்டுடனான இராஜதந்திர மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து தொடர்புகளையும் சவுதி அரேபியா உள்ளிட்ட ஆறு நாடுகள் துண்டித்துள்ளன. அதற்கு காரணம் அந்த நாடு ஐ.எஸ் ஆயுததாரிகளுக்கு உதவியளிப்பதாக குற்றம்சாட்டியே அவர்கள் அந்த தொடர்புகளை துண்டித்துள்ளனர். ஆகவே அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கும் கட்டார் அரசாங்கத்திற்கும் இடையில் இருக்கும் கொடுக்கல் வாங்கல் என்னவென்பது தொடர்பில் ஆராய வேண்டும்.

 

 

 

கட்டார் அரசாங்கம் என்ன தேவைக்காக ரிஷாட்டுக்கு நிதியுதவி அளித்திருக்கின்றது என்பது தொடர்பில் தேடிப்பார்க்க வேண்டும். அந்த நிதி எவ்வாறு வருகின்றது என்பது தொடர்பில் ஆராய வேண்டும். அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கும் கட்டாருக்கும் இடையில் இருக்கும் தொடர்பு தொடர்பில் விசாரணை செய்ய வேண்டும். இது அரசாங்கத்தின் கடமை.

 

 

இதேவேளை, இந்த ஊடக சந்திப்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், நாட்டில் இடம்பெறும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

 

 

 

மாகல்கந்த சுத்தாத்த தேரர் குற்றச் செயல்கள் தொடர்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன அறிந்திருப்பாறாயின் அது தொடர்பில் அமைச்சரிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ளுமாறு நாம் பொலிஸாருக்கு அறிவுரை வழங்குகின்றோம்.  அதனை மூடிமறைப்பது நீதிக்கு முரணானது. ஆகவே இது தொடர்பில் பொலிஸ் மாஅதிபர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனைவிடவும் பொலிஸாரும் சட்டத்தை நிலைநாட்ட வேண்டும்.

 

 

 

குற்றச் செயல்களில் யாராவது ஈடுபட்டிருந்தால் அவர்களை கைது செய்யுங்கள். யாராவது வர்த்தக நிலையங்களுக்கு தீ வைத்திருந்தால். தாக்குதல் நடத்தியிருந்தால். அல்லது தமக்கு தாமே தாக்குதல் நடத்திய சம்பவங்கள் தொடர்பில் எமக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆகவே உண்மையை வெளிப்படுத்துங்கள். மூடிமறைக்க வேண்டாம். ஆகவே யாராவது தவறிழைத்திருந்தால் தராதரம் பாராது கைது செய்யுங்கள். அதில் எமக்கு பிரச்சினையில்லை. அதுவே எமது வேண்டுகோள். பொது பல சேனா மீதும், ஞானசார தேரர் மீதும் குற்றச்சாட்டினை சுமத்தாமல் தவறிழைத்தவர்களை கைது செய்யுங்கள்.“

Leave a Reply

Your email address will not be published.