கடையாமட்டை மத்திய கல்லூரி O/L பரீட்சையில் புத்தளம் வலய மட்டத்தில் முதலாவதாக வந்து சாதனை !!

· · 1887 Views

2017  ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் கடையாமோட்டை மத்திய கல்லூரி மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று  புத்தளம் வலயத்தில் முன்னணி பாடசாலையாக திகழ்கின்றது.

பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுள் நான்கு மாணவர்கள் 4A சித்தியையும், இரண்டு மாணவர்கள் 8A,B சித்தியையும், இரண்டு மாணவர்கள்  7A,2B சித்தியையும்,  மாணவியொருவர்  7A,2C சித்தியையும் பெற்றுள்ளனர்.

இது தொடர்பில் மத்திய கல்லூரியின் முதல்வர் அதிபர் எம்.எஸ்.எம்.ஸஹீர் கருத்து தெரிவிக்கையில் எமது கல்லூரியில் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் 69 மாணவர்கள் பரீட்சையில் தோற்றியதில் 49 மாணவர்கள் நிலுவையில்லாத சித்தியைப் பெற்றுள்ளதோடு, தோற்றிய மாணவர்களுள் 71 வீதமான மாணவர்கள் சித்தியடைந்து பாடசாலைக்கு பெறுமை தேடி தந்துள்ளதாகக் கூறினார்.

சித்தியடைந்த அனைத்து மாணவர்களையும் மத்திய கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், மற்றும் பழைய மாணவ சங்கத்தினர் வாழ்த்துவதோடு, பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.

சித்தியடைந்த மாணவர்கள் விபரம்.

ம்.சுமையா      – 9A
ன்.முனீரா        – 9A
ம்.ஆர்.இஸ்மா – 9A
ப்.பஸ்ரா பெரோஸ் – 9A

ப். நஜீலா   –  8A,B
ம்.பீ. ஆகில் – 8A,B

ம்.ஆர். ரிபா   –  7A,2B
ம். சாஜிதா     –  7A,2B

ப்.சஹ்னியா  – 7A,2C

By : madurankuli media

Leave a Reply

Your email address will not be published.