கடைசியில் நெய்னா மரைக்காரும் வெற்றி : மு.கா. – ஐ.தே.க. கூட்டு ஆட்சி..?

· · 1180 Views

நடந்து  முடிந்துக்  கொண்டிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலில்  புத்தளம் நகர சபையின் 7 வட்டாரங்களில் தோல்வியுற்ற ஐக்கியத் தேசியக் கட்சி மொத்தமாக இரு ஆசனங்களை சேர்த்து போனஸ் ஆசனமாக 5 பெற்றிருப்பதால் 7 உறுப்பினர்களைக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் தனித்து ஆட்சியமைக்கும் வல்லமையை இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

என்றாலும் போனஸ் சமந்தமாக புத்தளம் தேர்தல் அலுவலகம் எத்தகைய உத்தியோகபூர்வமான அறிவித்தலையும் இது வரை வெளியிடவில்லை.

 

 

 

 

 

இதே நேரம், புதிய தேர்தல் ஏற்பாடுகளின் படி நான்கு பெண்மணிகளையும்  புத்தளம் நகர சபை உள்வாங்குதல் வேண்டும் என்பதால் ஐக்கியத் தேசியக் கட்சியின் தோற்ற வேட்பாளர்கள் சபைக்குள் நுழைவதில் சிக்கல்களை எதிர் நோக்கியுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.

 

 

 

 

 

 

இலங்கை அளவில் பெரும்பாலான சபைகளில் ஐக்கியத் தேசியக் கட்சி சார்ந்த நல்லாட்சி அரசாங்கம்தோல்வி அடைந்துள்ளதால் புத்தளத்தில்  மகிந்த அணிக்கு  சந்தர்ப்பம் வழங்காமல்  தனது பங்காளிக் கட்சியான    முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்தே ஆட்சியமைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

 

இந்த அடிப்படையில்  புத்தளத்தின் முக்கிய வட்டாரங்களை வென்று தனிக் கட்சியாக மிளிரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் மாவட்ட அமைப்பாளர் கே.ஏ. பாயிஸ் நகர சபையின் தலைவராவார் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published.