
கடும் வரட்சி – தேங்காய் இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு..!! இப்போதைய டெக்ஸ் பிரகாரம், ஒரு இறக்குமதி தேங்காய் 350/= முடியும்
· · 592 Viewsபரீட்சார்த்த அடிப்படையில் தேங்காய் கொள்கலன் ஒன்றை இறக்குமதி செய்வதற்கு பொருளாதார முகாமைத்துவத்துக்கான அமைச்சரவைக் குழு தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தேவைக்குப் போதுமானளவு உள்ளூர் தேங்காய் உற்பத்தி இல்லாமையின் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, உரிக்காத- நாருடன் கூடிய தேங்காய்களைக் கொண்ட கொள்கலன் ஒன்றைபரீட்சார்த்த அடிப்படையில் இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்பெறுபேறுகளின் அடிப்படையிலேயே, இறக்குமதி தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையின் பிரதான ஏற்றுமதி பொருளாக தெங்கு உற்பத்தி பொருட்கள் இருந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.