கடும் கோடை : உணவுப் பொருட்களின் விலையைக் குறைத்தும் கூட புத்தாண்டு வர்த்தகம் கடும் வீழ்ச்சி – அதிர்ச்சியில் வர்த்தகர்கள்

· · 406 Views

பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் நூற்றுக்கு 40 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக அத்தியாவசியப் உணவு பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த காலத்தில் நாட்டில் நிலவிய வறட்சி காரணமாக விவசாயிகளிடம் பணப்பற்றாக்குறை நிலவுவதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ஹேமக்க பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

sri-lanka-kandy-shopkeeper-in-general-store-A06EYH

கிழங்கு, பெரியவெங்காயம் மற்றும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் வீழ்ச்சியடைந்துள்ளமை கடந்த நாட்களில் பெறப்பட்ட அறிக்கைளின் ஊடாக தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம் தற்போது சந்தையில் 1 கிலோ பெரியவெங்காயம் 72 ரூபாவிற்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது 65 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

151 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட பருப்பு 1கிலோகிராம் தற்போது 135 ஆக விற்பனை செய்யப்படுவதுடன் 106 ஆக ரூபாவான விற்பனை செய்யப்பட்ட சீனி ஒரு கிலோகிராம் 98 ரூபாவிற்கு விற்பனை செய்யபடுவதாக அத்தியாவசியப் உணவு பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடக பேச்சாளர் சுட்டிகாட்டினார்.

 

Leave a Reply

Your email address will not be published.