ஐ. நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக ஏ.எல்.ஏ.அசீஸ் நியமனம் !! முதல் முஸ்லிம் என்ற பெருமையைப் பெற்றார்

· · 224 Views

ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக, ஒஸ்ரியாவிற்கான இலங்கை தூதுவராகவுள்ள பணியாற்றிவந்த ஏ.எல்.ஏ.அசீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

ஜெனீவாவிலுள்ள இலங்கையின் வதிவிட அலுவலகம் இதனை அறிவித்துள்ளது. குறித்த பதவிக்கான தரச்சான்றிதழை ஐக்கிய நாடுகளின் தலைமையகப் பணிப்பாளர் நாயகம் மைக்கேல் மொலெரிடம் அவர் நேற்று (புதன்கிழமை) கையளித்துள்ளார்.

 

 

ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தர விதிவிடப் பிரதிநிதியாக பதவி வகித்த ரவிநாத ஆரியசிங்கவின் மூன்று வருட பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், புதிய வதிவிடப் பிரதிநிதியாக ஏ.எல்.ஏ.அசீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

வெளியுறவுத் துறையில் 26 வருட கால அனுபவத்தைக் கொண்ட ஏ.எல்.ஏ.அஸீஸ், ஐக்கிய நாடுகள் சபையின் வியன்னா அலுவலகத்தின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதியாக கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். அத்தோடு, ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடர்புடைய விடயங்களிலும் தமது பங்களிப்பைச் செலுத்தியுள்ளார்.

 

 

இதேவேளை, ஐ.நா.வுக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதியாக பதவியேற்பதற்கு முன்னர் வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளராகவும் பதவி வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.