ஐ.தே.க. ஆட்சியமைக்கும் விடயத்தில் இரண்டாக பிளவு பட்டது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி – பெரும்பாலும் UNP ஆட்சி உறுதி..?

· · 908 Views

ஐ.தே.கவுடன் அரசாங்கத்தை அமைக்க ஒரு தரப்பு விருப்பம்

புதிய அரசாங்கமொன்றை அமைப்பது குறித்து ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களிடையே இரண்டு கருத்துக்கள் ஏற்பட்டுள்ளன.

 

 

 

இன்று (14) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தனியான ஒரு அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய அரசாங்கம் குறித்து ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் என்ன தீர்மானம் எடுப்பது குறித்து இன்னும் உறுதியாகவில்லை.

 

 

 

எவ்வாறாயினும், அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களிடையே விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

 

 

 

 

 

இதன்போது புதிய அரசாங்கமொன்றை அமைப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என ஒரு தரப்பு அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். ஜனவரி 08ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலின் போது மக்கள் வழங்கிய ஆணையைப் பாதுகாத்து, அப்போது வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தத் தரப்பு அமைச்சர்கள் கருதுகின்றனர்.

 

 

 

எனினும், இந்த யோசனைக்கு இன்னுமொரு தரப்பு அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எந்தவொரு நிபந்தனையின் அடிப்படையிலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

இது ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளை மீறிச் செல்லும் செயல் எனவும், எந்தவொரு கட்சிக்கு வேண்டுமானாலும் அரசாங்கத்தை அமைத்துக் கொள்ள முடியும் எனக் கூறி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துகொள்வதே சிறந்த யோசனை எனவும் அவர்கள் கருதுகின்றனர்.

 

 

 

இதேவேளை, மகிந்த ராஜபக்ச தரப்பினருடன் இணைந்து அரசாங்கமொன்றை ஸ்தாபிக்க யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த யோசனைக்கு பெரும்பாலான அமைச்சர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுளு;ளனர்.

 

 

 

எவ்வாறாயினும், இதுகுறித்து ஜனாதிபதி எந்தவொரு கருத்தையும் வெளியிட வில்லை என்பதுடன், எந்தவொரு அமைச்சருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து புதிய அரசாங்கமொன்றை அமைக்க இடமளிப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

 

 

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து அரசாங்கமொன்றை அமைக்க விருப்பாததன் காரணமாக, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள அமைச்சர்கள் சிலர், ஐக்கிய தேசியக் கட்சி அமைக்கும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கத் தயாராகி வருவதாக தெரியவருகிறது. இந்த நிலைமை நடைமுறைச் சாத்தியமாகும் பட்சத்தில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பலவீனமடையும் நிலை ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

 

 

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள 10 அமைச்சர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். சிலர் எதிர்க்கட்சியில் அமர்ந்துகொள்ளத் திட்டமிட்டுள்ளனர். நிலைமை இவ்வாறு இருக்க, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது பிளவுபட்டு இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.