‘ஐயா நித்திரை’ : கிந்தோட்டை கலவரம் பற்றிய ஜனாதிபதி விசாரணைக் குழு செயலாளர் அமைச்சர் சாகலவுக்கு தொலைப்பேசி அழைப்பை மேகொண்ட போது கிடைத்த பதில்

· · 1141 Views

சில தினங்களுக்கு முன்னர் காலி கிங்தோட பிரதேசத்தில் இரு இனங்களுக்கிடையே கலவரம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் குழுவொன்று நியமிக்கப்பட்டது.ஜனாதிபதி செயலகத்தின்சிரேஷ்டசெயலாளர்ஒருவர்,சட்டம்ஒழுங்குஅமைச்சர்சாகலரத்நாயக்கவின்தொலைபேசிக்கு அன்றிரவு அழைத்துள்ளார். அதன்போது குறித்த கைதொலைபேசி நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இதனால் அவரது வீட்டு தொலைபேசிக்கு அழைத்துள்ளார்.

 

 

 

 

இந்த தொலைபேசி அழைப்பிற்கு வீட்டில் இருந்து பதிலளித்தவர், ‘ஐயா நித்திரை’ எனக் கூறியுள்ளார். இதன்போது காலி, கிந்தோட்ட சம்பவத்தை விபரித்து, உடனடியாக இதனை அமைச்சருக்கு அறிவித்து, ஜனாதிபதிக்கு அழைப்பு எடுக்குமாறு தகவல் கூறியுள்ளார்.

 

 

 

 

சில மணி நேரங்கள் சென்ற போதிலும் அமைச்சர் தரப்பில் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதனால் ஜனாதிபதி செயலக செயலாளர் மீண்டும் அமைச்சரின் வீட்டிற்கு அழைத்துள்ளார். முதலில் தொலைபேசிக்கு பதிலளித்தவரே மீண்டும் கதைத்துள்ளார்.

 

 

 

 

”அமைச்சர் வஜிர (அமைச்சர் வஜிர அபேகுணவரத்ன) இதுகுறித்து பணியாற்றுவதால், எங்களின் அமைச்சர் காலையில் இதுகுறித்து அறிக்கையொன்றை அனுப்பிவைப்பதாக சொன்னார்” என்று அந்த நபர் பதிலளித்துள்ளார்.

 

 

 

 

 

சாகல அமைச்சர் கூறியதைப் போல, அதிகாலையில் அவரது அமைச்சில் இருந்து கிந்தோட்ட சம்பவம் குறித்து அறிக்கையொன்று ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அமைச்சின் ஊடகப் பிரிவு தனியார், அரச ஊடகங்களுக்கு அழைத்து, குறித்த அறிக்கைக்கு முக்கியத்துவம் வழங்கி பிரசாரப் படுத்துமாறு கோரியுள்ளனர்.

 

 

 

 

சாகல ரத்நாயக்க குறிப்பிட்டதுபோல் காலியில் வஜிர அபேகுணவர்தன அமைச்சர், பணியாற்றியுள்ளார். அவர் சம்பவம் நடந்த தினத்தன்று மாலை பாதுகாப்பில் இருந்த விசேட அதிரடிப்படையினரை மீள அழைத்துள்ளார்.

 

 

 

 

இந்த மோதல்கள் ஆரம்பிக்க முன்னர் காலியில் ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தர்கள், ஏற்படக் கூடிய நிலைமை குறித்து நாட்டின் பெருந்தலைவர்களுக்கு அறிவித்துள்ளனர். எனினும், மோதலைத் தடுக்க போடப்பட்டிருந்த பாதுகாப்பை அதிகரிப்பதற்கு பதிலாக அந்த பாதுகாப்பைக் குறைத்து சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுவதை இலகுபடுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.