“ஏண்டா வோட்டுப் போடவில்லை..? தோற்றுப்போன மகிந்த வேட்பாளர் அட்டகாசம் – புத்தளத்தில் சம்பவம்

· · 588 Views

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுண சார்பில் போட்டியிட்டுத் தோல்வியுற்ற வேட்பாளர் ஊரின் பொதுவிளையாட்டு மைதானத்தை மூடி அராஜகம் செய்துள்ளார்.

 

 

புத்தளம், வண்ணாத்திவில்லு அருகே மானதீவு பிரதேசத்தில் பொதுஜன பெரமுண கட்சியின் சார்பாக முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் போட்டியிட்டிருந்தார்.

 

 

 

 

 

எனினும் அவர் இம்முறை தோல்வியைத் தழுவ, ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றிருந்தார்.

 

 

 

இந்நிலையில் தோல்வியைத் தழுவிய வேட்பாளர் தான் பிரதேச சபை உறுப்பினராக இருந்த காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஊரின் விளையாட்டு மைதானத்தை மூடிவைத்து அராஜகம் செய்துள்ளார். அங்கு விளையாட வந்த இளைஞர்களையும் விரட்டியடித்துள்ளார்.

 

 

 

 

இது குறித்து தகவல் அறிந்த பொலிஸார் இருதரப்பினரையும் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.