எல்லை மீறும் துவேஷம்..!! புத்தளம் நகர சபை செயலாளரும்புத்தளம் போலீசாரும் சேர்ந்து நாடகம்..!! P.H.I. சுரேஷ் தமிழர் என்பதற்காக போலீசார் துவேஷம்

· · 985 Views

அண்மையில் தாக்கப்பட்ட  புத்தளம் நகரசபையின் சுகாதார பரிசோதகரான N. சுரேஷ் மீது தாக்குதல் நடத்தியவர்களை புத்தளம் போலீசார் வேண்டுமென்றே கைது செய்யாமல் காலம் கடத்துவதாக நகர சபையின் ஊழியர்கள் தெரிவித்தார்கள்.

 

 

 

 

தாக்குதலில்  ஈடுபட்ட  குண்டர்கள்  சுதந்திரமாக திரிவதற்கு புத்தளம் போலீசார் துணைப் போவதாகவும், போலீசார் பெருமளவில் பணம் பெற்றுக் கொண்டே தமது கடமைகளை செய்யத் தயங்குவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

 

 

 

 

இதே வேளை கடந்தவாரம் முழுப் புத்தளமுமே திரண்டு நகரை சுத்தமாக்கியத்தை கொச்சைப்படுத்தும் நோக்கில் வேண்டுமென்றே புத்தளம் நகரில் குப்பைகளை அல்லாமல் வைத்திருப்பதற்காக   புத்தளம் நகர சபை செயலாளர்  திரு. சுரேஷ் தாக்கப்பட்டதை உளப்பூர்வமான நோக்குகளோடு நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்றும் அங்கிருந்து  வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

 

 

 

 

இதே வேலை புத்தளம் போலீசார் இத்தாக்குதல் சம்பவங்களில் சம்பந்தமில்லாதவர்களை கைது செய்தும் பின்னர் பிணையில் விடுதலை செய்தும்  அரசாங்க அதிகாரி தாக்கப்பட்ட விடயத்தை கேலிக் கூத்தாக்குவதாக  புத்தளத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

 

 

 

தற்போதைய பொலீஸ் பொறுப்பதிகாரியின்   கீழ் புத்தளத்தில் மீண்டும் குழப்ப நிலைகளும், குற்றச்செயல்களும் போதைப்போரும் விற்பனை மற்றும் பாவனை என்பன அதிகரித்துள்ளதாக புத்தளம் மக்கள் குற்றம் சாட்டிவருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.