எமிறேட்சுடன் மீண்டும் இணையும் ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ்..!! துபாயில் பேச்சு வார்த்தை

· · 452 Views

ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்துடன் இணைந்து செயற்படுவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

 

 

 

இந்த தகவலை மத்திய கிழக்கு ஊடகங்கள் இன்று வெளியிட்டிருந்தன.

 

 

எவ்வாறாயினும், இலங்கையிலுள்ள விமான நிறுவனம் அல்லது விமான நிலையத்தின் பங்குகளைக் கொள்வனவு செய்வதற்கான எவ்வித திட்டமும் தமக்கு இல்லை என எமிரேட்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 

arabianbusiness.com என்ற இணையத்தளத்திற்கு அந்நிறுவனம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

 

 

1998 ஆம் ஆண்டு எமிரேட்ஸ் நிறுவனத்தால் ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் 70 மில்லியன் டொலர் பெறுமதியான பங்குகள் கொள்வனவு செய்யப்பட்டதுடன், 2010 ஆம் ஆண்டு அவர்கள் 53 மில்லியனை மீண்டும் இலங்கைக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.