எமிரேட்சின் ஏர்பஸ் A380 (double-deck Airbus A380) விமானம் விரைவில் கட்டுநாயக்காவில் தரை இறங்கும்..!! சர்வதேஷ தரத்திற்கு மாறிய கட்டுநாயக்க

· · 782 Views

இலங்கையின் விமானப் போக்குவரத்து வரலாற்றில், முதல் முறையாக Airbus A380 விமானத்தை சேவையில் ஈடுபடுத்த எமிரேட்ஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

 

 

 

 

இரட்டைப் பருந்து ஏர்பஸ் A380 (double-deck Airbus A380) விமானத்தை இலங்கைக்கான விமான சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

 

 

எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 14 திகதியில் இருந்து குறித்த விமானம் கொழும்பிற்கான தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

இந்த விமானம் வாரம் ஒரு முறை சேவையில் ஈடுபடும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

 

Image result for A380 (double-deck Airbus A380)

 

 

 

அத்துடன் இந்த விமானம் தூர கிழக்கு நாடொன்றில் தரித்து நின்று செயல்படும் என அவர் குறிப்பிடடுள்ளார்.

 

 

கடந்த ஏப்ரல் மாதம் கட்டுநாயக்க விமான நிலை ஓடுபாதை விரிவாக்கம் செய்யப்பட்டதன் காரணமாகவே ஏர்பஸ் ஏ 380 விமானம் இலங்கைக்கு பறக்க ஆயத்தமாகுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

ஏர்பஸ் ஏ 380 விமானம், ஐரோப்பிய விமான உற்பத்தி நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றது. வெள்ளை நிறத்திலான இந்த விமானம் இரட்டை பருத்த உடலை கொண்ட நான்கு என்ஜின் ஜெட் விமானமாகும்.

 

 

இது உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமாகும். இந்த விமானத்தை இயக்கும் விமான நிலையங்களில் இந்த விமானத்தை ஏற்றுக்கொள்ளும் வசதிகளை மேம்படுத்தப்படுத்தியிருக்க வேண்டும் என்பது அவசியமாகும்.

Leave a Reply

Your email address will not be published.