“எமது புத்திசாலித்தனமான தாக்குதலுக்கு தயாராகுங்கள்..!! ரஷ்யாவுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை

· · 439 Views

வார இறுதியில் நடைபெற்றதாக கூறப்படும் ரசாயன தாக்குதலுக்கு பதிலடியாக சிரியாவில் ஏவுகணை தாக்குதல்களுக்கு ரஷ்யா தயாராக வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

சிரியாவில் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரசாயன தாக்குதலுக்கு பதிலடியாக வழங்கப்படும் அமெரிக்காவின் எந்தவொரு தாக்குதலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக ரஷ்யாவின் மூத்த தலைவர்கள் மிரட்டியுள்ளனர்.

 

 

 

இந்த தாக்குதல் தொடர்பாக கடும் பதிலடி வழங்கப்படும் என்று டிரம்ப் முன்னதாக உறுதி அளித்துள்ளார்.

 

ரஷ்யாவின் ராணுவ ஆதரவு பெறுகின்ற அதிபர் பஷார் அல் அசாத்தின் அரசு, எந்தவொரு ரசாயன தாக்குதலுக்கு பின்னாலும் தாங்கள் இருப்பதாக கூறப்படுவதை மறுத்துள்ளது.

 

சிரியாவின் அதிபர் அசாத்தை “வாயுவால் கொல்லும் விலங்கு” என்று தன்னுடைய ட்விட்டர் பதிவில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

 

Donald J. Trump

@realDonaldTrump

“”” Russia vows to shoot down any and all missiles fired at Syria. Get ready Russia, because they will be coming, nice and new and “smart!” You shouldn’t be partners with a Gas Killing Animal who kills his people and enjoys it!”””””

Leave a Reply

Your email address will not be published.