“எனக்கு அம்மா..அக்கா வேடமொன்றாவது தாருங்கள்..!!விஜய்யிடம்கதறி அழுத சிம்ரன் – இதுதான் தமிழ் சினிமா

· · 1553 Views

நடிகை சிம்ரன் என்றால் தெரியாதவர் இருக்க முடியாது. மனதுக்குள் சிம்ரன் என்று நினைப்போ என்று நம்மில் பலர் விளையாட்டாக பேசியதுண்டு.

simran_1458821725190

கமல், சரத்குமார், விஜயகாந்த், விஜய், அஜித், சூர்யா, பிரசாந்த், ஷியாம், மாதவன் என பல நடிகர்களுடன் நடித்தவர் சிம்ரன். 50க்கும் அதிகமான படங்களில் நடித்து இவருக்கு இணையாக சினிமாவில் எவரும் பேசப்படவில்லை.

அப்படியாக பிரபலமாகி கோடிக்கணக்கில் சம்பாதித்த இவர் 2003 இல் தீபக் என்பரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் விட்டு விலகி இருந்தார்.

ஆதீப், ஆதிக் என்னும் இரு மகன்கள் இவருக்கு உள்ளனர். குடும்பத்தை கவனித்து கொண்டு இருக்கும் சிம்ரன் சில டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக வந்தார்.

இவர் நடனத்தில் கைதேர்ந்தவர். பரதநாட்டியத்தை முறையாக கற்றவர் ஹிந்தியில் நடிகையாக அறிமுகமானவர்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் அதிகம் நடித்தவர், கன்னடம், மலையாளத்தில் ஒரு சில அப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது சினிமா வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் இருக்கும் சிம்ரனை சமீபத்தில் நடந்த பொது நிகழ்ச்சியில் பார்த்த பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஹீரோயினாக கலக்கியவர் வயதான தோற்றத்தில் பார்த்ததும் சிலர் நம்பவில்லையாம். படங்களுக்காக தீவிரமாக வலை வீசியும் படம் எதுவும் சிக்கவில்லையாம்.

இதனால் இவர் தன்னுடன் நடித்த விஜயிடம் எனக்கு அம்மா, அக்கா இது மாதிரியான வேடங்கள் தாருங்கள் என்று கண்ணீர் விட்டாராம்.

இவருக்காக இப்போது விஜய், பேரரசு இயக்கத்தில், சிம்ரன் தயாரிப்பில் ஒரு படம் செய்யப் போகிறாராம் .

Leave a Reply

Your email address will not be published.