எந்த ஒரு பாடசாலையிலும் தேவைக்கு அதிகமாக ஆசிரியர்கள் இருக்க முடியாது !! ஜனாதிபதி நடவடிக்கைக்கு தயார்

· · 202 Views

ஆசிரிய நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பான புதிய கொள்கையை இந்த ஆண்டில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

 

 

 

 

புதிய கொள்கைக்கமைய எந்தவொரு பாடசாலையிலும் ஆசிரியகள் மேலதிகமாக இருக்க முடியாது.

 

 

அவ்வாறு மேலதிகமாக இருக்கும் ஆசிரியர்கள் வெற்றிடம் நிலவும் பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற வேண்டும் என சுற்றறிக்கை வெளியிடப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

 

 

பொலன்னறுவை, சுங்காவில முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் புதிய கட்டடத்தை மாணவர்களுக்கு உரித்தளிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

 

நாட்டிலுள்ள பிள்ளைகளின் கல்வி சீராக வேண்டும் என்பதற்கான தீர்மானத்துக்கு வந்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டிலுள்ள எந்தவொரு பிள்ளைக்கும் கல்விக்கான சலுகைகள் கிடைக்காமல் இருக்கக் கூடாதென்று தெரிவித்தார்.

 

 

நாட்டிலுள்ள அனைத்து இனத்தவர்களினதும் பிரச்சினைகளை தீர்த்தல், வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவருக்கும் ஒரே வகையில் சேவையாற்றுதல் ஆகியவை ஜனாதிபதி என்ற வகையில் எனது பொறுப்பாகும் என குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.