“எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளேன்..!! Dr.ரிபாத் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

· · 1649 Views

“இம்முறை இடம் பெற உள்ள மாகாண சபைத் தேர்தலில் தான் போட்டியிட உள்ளதாக NFGG அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் விஷேட வைத்திய நிபுணருமான Dr. ரிபாத் தெரிவித்தார்.

 

இன்று காலையில் இடம் பெற்ற எமது இணையத்துடனான  சந்திப்பின் போதே Dr ரிபாத், தான் அரசியலில் நேரடியாக களமிறங்குவதை  அறிவித்தார்.

 

 

” நான் நேரடி அரசியலுக்கு வருவதற்கான தருணம் இது. நான் சரியான நேரத்திலேயே இந்த முடிவை எடுத்திருக்கின்றேன். நாம் கடந்த நகர சபைத் தேர்தலில் மக்களின் ஆணையைப் பெற்றுள்ளோம். இது மக்கள் எமது கட்சியான NFGG யை அங்கீகரித்தற்கான சான்று. எனவே நாம் மக்களின் எதிர்ப்பார்ப்புகளை மற்றைய கட்சிகளிலும் இருந்தும் மாறுபட்டு, பிற கட்சிகளைப் போன்று ஒரே வடிவிலான அரசியலை செய்யாமல் நாம் தொடர்ந்தும் எமது பாணியிலான நல்லாட்சிக் கொள்கைகளை முன்னெடுக்க உள்ளோம்.

 

எமது NFGG கட்சியானது சொன்னதை செய்யும் கட்சியாகும். நாம் கடந்த தேர்தலில் எமது கட்சி வெற்றி பெரும் பட்சம் மக்களின் எதிர்ப்பார்களுக்கு மதிப்புப் கொடுப்போம் என வாக்குறுதி வழங்கி இருந்தோம். அதனை நாம் நகர சபைத் தெரிவின் போது செயற்படுத்தினோம்.

 

எமக்கு வாக்களித்த மக்கள் விரும்பாத கட்சிகளுக்கு நாம் தலைவர் தெரிவின் போது நடுநிலை வகித்தோம். எத்தகைய பேரம் பேசுதலுக்கும் நாம் விலைப் போகவில்லை.இவ்வாறான ஒரு அரசியலை மேம்படுத்துவற்காகவே  நான்  வருகின்ற மாகாண சபைத் தேர்தலில் வாக்குக் கேட்கும் முடிவை எடுத்திருக்கின்றேன்.

 

மாகாண சபையின் மூலம் சமூகத்திற்கு கிட்ட வேண்டிய ஏராளமான வரப்பிரசாதங்கள் இருக்கின்றன.குறிப்பாக சுகாதாரத் துறை சார்ந்த பல விடயங்கள் காணப்படுகின்றன. இவைகளை துறைசார் அறிவின் மூலம் பெற்றுக் கொள்ளும் நிகழ்ச்சி நிரல்களை அமைப்பதனூடாக அவற்றின் பலன்களை மக்கள் அனுபவிக்க வழிவகுக்க உள்ளோம்.

 

இவ்வாறு Dr. ரிபாத் குறிப்பிட்டார்.

 

இந்த தேர்தலில் குறைந்த பட்சம் எமது கட்சி ஒரு போனஸ் ஆசனத்தைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் தென்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

  • மிபவ்

Leave a Reply

Your email address will not be published.