எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோரும் சு.க. கலகக்கார அமைச்சர்கள் – பாராளுமன்றை ஒத்தி வைத்தார் ஜனாதிபதி

· · 511 Views

நாடாளுமன்றை ஒத்திவைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.

 

நாடாளுமன்ற அமர்வு இன்று ஏப்ரல் 12ஆம் திகதி நள்ளிரவு தொடக்கம் வரும் மே மே 8ஆம் திகதிவரை ஒத்திவைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றிரவு அதிசிறப்பு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

 

நாடாளுமன்றம் வரும் 19ஆம் திகதி மீளக் கூடவிருந்தது. அன்றைய தினம் ஜனாதிபதி நாட்டிலிருக்கமாட்டார். இந்த நிலையில் நாடாளுமன்ற அமர்வு வரும் மே 8ஆம் திகதியே நடைபெறும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.

 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை அடுத்து கூட்டு அரசுக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

 

கூட்டு அரசிலிருந்து விலகவேண்டும் என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களால் ஜனாதிபதிக்கு பெரும் அழுத்தம் வழங்கப்பட்டது.

 

அத்துடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக வாக்களித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டு அரசிலிருந்து விலகி எதிரணியில் செயற்படுவதாக ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

 

அத்துடன் அவர்கள் 16 பேரும் இணைந்து எதிர்கட்சித் தலைவர் பதவியைக் கோரப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

 

இந்த நிலையில் நாடாளுமன்றை ஓரு மாதத்துக்கு ஜனாதிபதி ஒத்திவைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.