எஞ்சினியர் ரின்சாத் அஹ்மதுவின் பிரகடனம்..!! வட்டாரம் 1ல் மலைகளோடு மோதும் ஒரு கல்வியாளரின் கனவு – நம்பிக்கை

· · 1238 Views

செழிப்பான நகரொன்றை உருவாக்குவோம்…
*************************************************************
அன்பின் 1 -ம் வட்டார வாக்காளர் பெருமக்களே!!
நாம் புதியதொரு நகர சபைத் தேர்தலை புதியதோர் தேர்தல் முறைமையில் எதிர்நோக்கியுள்ளமை நாம்
அனைவரும் அறிந்ததே.

 

 

இருந்த போதிலும் இந்தத் தேர்தல் முறை எமது ஊரிற்கு, குறிப்பாக எமது 1 -ம் வட்டார மக்களுக்கு எவ்வாறான நன்மைகளை சுமந்து வருகின்றது என்பதைப் பற்றியும், இந்த முறைமையினூடாக இந்த ஊரையே ஆட்டுவிக்கின்ற டெங்கு நோய், சீரற்ற வடிகால்கள், ஒழுங்காக அகற்றப்படாத குப்பைக் கூளங்கள், போதைப் பொருள் பாவனையும் விற்பனையும் போன்ற பாரிய பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வினைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது.

 

 

 

மேலும், எமது 1 -ம் வட்டார மக்களின் கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், உட்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றை மேம்படுத்தும் அரியதொரு சந்தர்ப்பமாக இந்தத் தேர்தல் அமையவுள்ளதென்பதையும் உங்களுக்குத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

 

 

எமது 1 -ம் வட்டாரத்தில் தேர்ந்தெடுக்கப்படும் நகர சபைப் பிரதிநிதியின் அறிவு ஆன்மீகப் பின்னணி, நேர்மை, தூரநோக்கு, சமூகப் பற்று, சேவை மனப்பாங்கு, அர்ப்பணிப்பு மற்றும் அவர் சார்ந்திருக்கும் கட்சியின் கொள்கைகள், அதனை வழிநடத்துகின்ற தலைமைத்துவம், அக்கட்சியைச் சார்ந்துள்ள உறுப்பினர்களின் பின்புலம் போன்ற அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் கிட்டுவதும்,
அபிவிருத்தி செயற்பாடுகள் அமையவிருப்பதும் தெளிவான விடயங்களாகும்.

 

 

 

 

 

அந்த வகையில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG)யின் இரட்டைக் கொடி மக்களின் நலனை
மட்டும் மையமாகக் கொண்டு செயற்படுகின்ற தேசிய அரசியல் கட்சியாக ஒரு தசாப்த காலத்தைத் தாண்டி பரிணாமம் பெற்றுள்ளதும், அக் கட்சியின் புத்தளத்திற்கான தலைவர் வைத்திய நிபுணர் MIM ரிபாத் (VP) அவர்களின் வழிநடத்துதல், அவருடைய அரசியல் பயணத்தில் கைகோர்த்துள்ள புத்திஜீவிகள், துறைசார் நிபுணர்களின் பின்புலம் போன்றவை இந்த அபிவிருத்திகளை உறுதி செய்யும் என்றும் நம்புகின்றேன்.

 

 

 

 

 

எனவே, 1 -ம் வட்டார மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் நோக்கோடு இரட்டைக் கொடி சின்னத்தின் 1 -ம் வட்டாரத்துக்கான வேட்பாளனாக உங்கள் முன் வந்துள்ளேன். கணனித்துறையில் பெற்றுக்கொண்ட கலைமாணிப் பட்டம் (B.Sc. Engineering), முகாமைத்துவத் துறையில் பெற்ற முதுமாணிப் பட்டம் (MBA), கடந்த எட்டு (8) வருடங்களாக மூன்று நிறுவனங்களை புத்தளத்தில் ஸ்தாபித்து (Imara Software Solutions, Imara Technology Studies, Streamliners) ஏககாலத்தில் அவற்றை முகாமை செய்வதிலும், நிருவகிப்பதிலும் பெற்றுக்கொண்ட அனுபவம் ஆகியவற்றைப் பயன்படுத்தி புத்தளம் மக்களுக்கு குறிப்பாக எனது 1 -ம் வட்டார மக்களுக்கு நல்லதொரு விடிவைப் பெற்றுக்கொடுக்க முடியும் என நம்புகின்றேன்.

 

 

 

 

புத்தளம்வாழ் மக்கள் நல்லவற்றைத் தெரிவு செய்வார்கள் என்றும் தமது தலைவிதியைத் தீர்மானிக்கின்ற தேர்தலில் தூரநோக்கோடு செயற்படுவார்கள் என்றும் உறுதியாக நம்புகின்றேன்.

 

 

 

 

M.F. ரின்சாத் அஹமத்(பொறியியலாளர்)
B.Sc.(Eng) Hons., MBA(Col)
CEO, Imara Software Solutions (PVT) LTD

இரட்டை கொடிக்கு வாக்களிப்போம் – டெங்கு நோயைத் தோற்கடிப்போம்!

 

 

“Vote for NFGG and enjoy a dengue-free Puttalam”

Leave a Reply

Your email address will not be published.