எச்.ஐ.வி. தொற்று நோய் சந்தேக மாணவி முகமூடி அணிந்து மீண்டும் போராடுகிறாள் – கல்வி அமைச்சின் சங்கடம்

· · 784 Views

கம்பஹா வலய கல்வி அலுவலகத்திற்கு முன்னாள் தாய், மகள் மற்றும் சிறிய தாய் முகமூடி அணிந்தவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

குறித்த மாணவிக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பதாக பாடசாலையிலுள்ள அதிகாரிகள் கூறியுள்ளமையால், இந்த இரண்டாவது முறையாகவும் பாடசாலைக்கு செல்வதை தவிர்த்துள்ளார்.

 

 

பாடசாலை அதிகாரிகளின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

 

 

 

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கம்பஹா கனேமுல்ல குடாபொல்லத ஸ்ரீசுமங்கல பாடசாலையில் கல்விகற்று வரும் மாணவிக்கு அந்தப் பாடசாலையின் அதிகாரிகளின் செயற்பாட்டால் கடந்த 20 ஆம் திகதி முதல் மாணவி பாடசாலைக்கு செல்வதை தவிர்த்து வருவதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

 

 

குறித்த மாணவி முதலாம் ஆண்டு முதல் இடம்பெற்றுவரும் பரீட்சைகளில் முதலாம் இடம்பெற்று வந்துள்ளார்.

 

 

இதற்கு முன்னரும் அந்த மாணவிக்கு பாடசாலை செல்ல முடியாமல் கடந்த வருடமும் இந்நிலை ஏற்பட்டிருந்தது.

 

எனினும் இதில் தலையிட்ட மனித உரிமைகள் ஆணைக்குழு, மீண்டும் அந்த மாணவி பாடசாலை செல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருந்தது.

குறித்த மாணவிக்கு எவ்வித அநீதியும் இழைக்கப்படக்கூடாது என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமும் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், குறித்த மாணவி ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள நிலையில், அவருக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கு அதிகாரிகள் உரிய தீர்வினை வழங்க வேண்டும் என்றும் அவரது தாய் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கோரியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.