எசப்பாட்டு: ஒரு புத்தளத்து அலுவலகம்…கறுப்பால் மூடிய முகத்துடன் பெண் அலுவலகர்…முகச்சுளிப்புடன் அதிகாரி !! – முஸ்லிம் பெண்கள் அபாயாக்களின் நிறத்தை மாற்றுவது பின்னடைவல்ல

· · 529 Views

Pond5_5435143

பௌத்த நிக்காயாக்களில் ஒன்றின் பீடாதிபதி ஒருவர் அண்மையில் நடத்திய இதழியலாளர் சந்திப்பின்போது ”முஸ்லிம்களின் அடிப்படைவாதம் இந்நாட்டின் பௌத்த சமூகத்துக்கு அச்சறுத்தலாக உள்ளது” என்று குறிப்பிட்டதை இந்நாட்டின் முஸ்லிம் சமுகம் அவரசமாக கனவத்தில் எடுக்க வேண்டும். அடிப்படைவாதம் என்றால் என்ன? முஸ்லிம்களின் அடிப்படைவாதம் எவ்வாறு இவர்களைப் பாதிக்கிறது என்று நாம் அவர்களைக் கேட்பதற்கு முன்னர் நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டிய மிகப் பொருத்தமான தருணம் இதுதான் என்று நினைக்கிறேன்.

அடிப்படைவாதம் என்று எவற்றுக்கெல்லாம் சுட்டுவிரல் நீட்டப்படுகிறதோ அவற்றில் ஒன்று நமது பெண்களின ஆடைக் கலாச்சாரமாக இருக்கிறது, விஷேடாக கறுப்பு நிறம். ”எழிமையான இஸலாமிய ஆடை” என்று கருதப்பட்டது முன்னெப்பாதையும் விடவும் இந்நாட்களில் பெரும் சர்ச்சைக்குரியதாகியுள்ளது.

இந்த எழிமையான ஆடைக் கலாச்சாரம் என நாம் கருதுவது இந்நாட்டின் பெரும்பாண்மைச் சமூகத்துக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவதற்கு சில பல தருணங்களில் நமது பெண்களின் வகிகாகமும் காரணியாக உள்ளது என்ற கசப்பான உண்மையை ஏற்றுக் கொள்ளவும் வேண்டித்தான் இருக்கிறது.


அண்மையில் முஸ்லிம் சமுகம் பெரும்பாண்மையாக உள்ள ஒரு புத்தளத்து  அலுவலகத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரியுடன் ஒரு விடயம் தொடர்பாக உரையாடிக் கொண்டிருக்கும்போது அவர் தனது மேசை மணியை அடித்து அலுவலகச் சிற்றூழியரிடம் ஒரு குறிப்பிட்ட உத்தியோகத்தரை எனது விடயம் தொடர்பான கோவையுடன் வருமாறு செயதி அனுப்ப சிறிது நேரத்தில் முகம் மூடப்பட்ட ஒரு பெண கோவையுடன் அந்த அறைக்கு வந்தார் .

முகச் சுளிப்புடன் அதைப் பெற்றுக் கொண்ட அந்த அதிகாரி அந்தப் பெண் அந்த அறையை விட்டு சென்றபின்னர் ” பாருங்களேன் இவர் ஒன்ற‌ரை வருடங்களாக எனது அலுவலகத்தில் வேலை செய்கிறார். இது ஆணா பெண்ணா என்று கூட எனக்குத் தெரியாது. நான் யரிடம் இருந்து ஆவணங்களைப் பெறுகிறேன், யாரிடம் ஆவணங்களைக் கொடுக்கிறேன் என்று கூட எனக்குத் தெரியாது. எனது நிலை பயங்கரமாக உங்களுக்குத் தெரியவில்லையா? ” என்று கேட்டபோது அவருக்குச் சொல்ல என்னிடம் எந்தப் பதிலும் இருக்கவில்லை.


அந்த அலுவலகத்தைவிட்டுச் சென்று அடு்த்தநாள் கூட ”எனது நிலை பயங்கரமாக உங்களுக்குத் தெரியவில்லையா?” என்ற கேள்வி எனது காதுகளில் நரசுரமாய் ஒலித்துக் கொண்டிருந்தது. சம்பவத்‌தை இன்னுமொருவருடன் பகிர்ந்து கொண்டபோது மற்றுமொரு திடுக்கிடும் தகவல் கிடைத்து.

தலை நகரில் உள்ள அதி முக்கியத்துவமிக்க உயர் கல்வி நிறுவனத்தில் (பிரச்சினைகளைத் தவிர்த்துக் கொளதவற்காக அந்த நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிட வில்லை. ஆனால் இது எனக்குத் தகவல் தந்தவரின் முதல் நிலை அனுபவம்).
ஒரு பெண் அந்த கல்வி நிலையத்தில் அனுமதி பெற்ற முதல் நாளே தனக்கு முகம் மூடும் மத உரிமை இருக்க வேண்டும் என்பதற்காகப் போராடி அதைப் பெற்றுக் கொண்டு தனது கல்வியைத் தொடரந்து இறுதிப் பரீட்சையிலே ஆள்மாராட்டம் செய்து கையும் களவுமாக சிக்கிக் கொண்டாராம். இந்த சம்பவங்களின் பார தூரம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல கார்களின் கறுப்புக் கண்ணாவடி, மோட்டார் சைகிள் தலைக் கவசத்தின் முகப்புக் கண்ணாடி போன்றவற்றையே தடைசெய்யும் அளவுக்கு முப்பது வருடங்கள் அச்சத்தில் வாழ்ந்த நாட்டில் இந்த கறுப்பு ஆடைக் கலாச்சாரம் பிரச்சினையைத் தோற்றவிப்பதை எவ்வாற தவிர்ப்பது?.

கடந்த இரண்டொரு தினங்களுக்கு முன்னர் கறுப்பு ஆடைக் கலாச்சாரத்தை வேறு நிறங்களாக மாற்றிக் கொள்வது பற்றிய பிரேரணைகளும் முன்வைக்கப்பட்டிருப்பதை அறியக் கிடைத்து. இது காலத்துக்கேற்ற பிரேணையாக எமக்குத் தெரிகிறது. அதை விட்டுக் கொடுக்க மறுத்தால் நான் நினைக்கிறேன் அதுதான் அடிப்படை வாதம் என்று.

கறுப்பு நிற ”ஹிஜாப், அபாயா” போன்றவை எழிமையான ஆடைக் கலாச்சாரத்தின் சின்னங்கள் என்பது ஒரு காலத்தில்தான். அது கூட இப்போது என்னவாய்ப் போய்விட்டது அவதானித்தீர்களா? கண்டவர்களின் கண்களை இழுக்கும் அழவுக்கு அதிலே மின்னுகினற் அலங்காரங்கள், அலங்கோலங்கள் வந்து விட்டனவே. இதை எப்படி நாம் எழிமையான இஸ்லாமிய ஆடைக் கலாச்சாரம் என்று நியாயப்படுத்தப் போகிறோம்?

கல்வியில் நாம் அறைகுறைகள்தான் என்றாலும் கூட எமக்குச் சொல்லித்தரப்பட்ட வரலாற்றுச் சமபவங்களில் இருந்து நாம் கற்றுக் கொண்டவைக்கும், முஸ்லிம் உம்மாவின் சமகால செயற்பாடுகளுக்கும் பொருத்தம் இருப்பதாகத் தெரியவில்லை.
மஸ்ஜிதுன் நபவியில் தம்மைச் சந்தித்த தூதுக் குழுவினர் தமது சமய வழிபாடுகளை நிறைவேற்ற அந்த புனித பள்ளிவாசலில் இறைத் தூதர் இடம் கொடுத்ததாகத்தான் கேள்விப் பட்டிருக்கிறோம்.

ஆனால் முஸ்லிம் அல்லாதவர்கள் இரு புனிதத் தலங்களுக்குள் உட்புக முடியாது என்ற சட்டம் எப்போது வந்தது?. இதில் உள்ள சட்ட நுணுக்கங்களை அறியும் அளவுக்கு நமக்கு ஞானம் இல்லை. ஆனால் ஒன்று மட்டும் உண்மை. எத்தனை முஸ்லிம் அல்லாத பணிப் பெண்களை முஸ்லிம் பெயர்களில் முஸ்லிம்களே அனுப்பி அந்த புனித தலங்களுள் செல்ல வைக்கிறார்கள்?. வல்லரசுகளின் உளவுச் சேவையில் உள்ளவர்கள் எத்தனை பேர் இந்த பொறி முறையைக் கையாண்டு புனித் தலங்களுக்குள் செல்கிறார்கள் என்று நாம் அறியோம்.

நமது ‌பெண்களின் இஸ்லாமிய ஆடைக் கலாச்சாரத்தைப் பின்பற்றவது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான விட்டுக் கொடுப்பாக எமக்குப் படுகிறது. விட்டுக் கொடுப்பு என்று வரும்போது எந்த வரலாற்றிலும் காணக் கிடைக்காத விட்டுக் கொடுப்பை ”ஹு‌தைபியா” உன்படிக்கை எமக்குக் காட்டுகிறது. நல்லிணக்கம் ஒன்று ஏற்படக்கூடும் என்பதற்காக புனித யாத்திரையைக் கூடக் கைவிட்டு இறைத் தூதர் திருமப்பிச் சென்றார்கள் என்றால் சில பல விட்டுக் கொடுப்புக்களை நம் சமுகம் செய்தால் என்ன?

நாட்டில் இன ஒருமைப்பாட்டைக் கருத்திற் கொண்டு சமுகத்தின் சில் முக்கியஸ்தர்கள் பிரேரித்திருப்பது போல நமது தாய்க்குலத்தின் இஸ்லாமிய ஆடைக் கலாச்சாரத்தில் நிற மாற்றம் செய்தால் என்ன?

சில துறைசார் சகோதரிகளுக்கு இதிலே உடன்பாடு உண்டு. கறுப்பு நிறம் பல அசௌகரியங்களை ஏற்படுத்துவதாகக் குறிப்பிடுகிறார்கள். உடல் நலத்துக்கும் அது ஒவ்வாததென வைத்தியர்களும் தெரிவிப்பதாக சிலர் சுட்டிக் காட்டினாரகள்.
கருத்துச் சொல்லும் உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. ஒருவர் கருத்து அடுத்தவருக்கு ஏற்புடைத்ததாய் இல்லாதபோது நாகரிகமாக பதில் கருத்தை முன்வைப்பது அழகிய நாரீகம். அதைத் தவிர்ரsத்து வாயில் வந்வாறெல்லாம் உளறும் கருத்துளை எழுதுவதிலிருந்த தவிர்ந்துகொள்ளுமாறு விநயமாகக் கேட்டுக் கொள்கிறோம்.

( செய்கு இப்ராஹீம் )

குறிப்பு : இந்தக் கட்டுரைக்கான மறுப்புக்கட்டுரைகள் அனுப்பினால் பதிவு செய்யப்படும் puttalamtoday@gmail.com

2 comments

  1. அஸ்ஸலாமு அழைக்கும் …உங்களின் பதிவில் முகமூடும் ஹிஜாப் அணிவதை தவிர்க்க சொல்கிறீர்களா? அல்லது கருப்பு நிற ஹிஜாபை தவிர்க்க சொல்கிறீர்களா? என்பது தெளிவாகவில்லை …கருப்பு நிறத்திலான ஹபாய் அணிவது தனது அங்கங்களின் கவர்ச்சியை மறைக்கும் ஆடையின் நிறத்தில் கூட கவர்ச்சி கூடாது என்பதற்காக பொதுவான நிறமாக கறுப்பை தேர்வு செய்தார்கள் ..என்று படித்த ஞாபகம் .

    அண்மையில் இலக்கியத்துக்கான பரிசு பெற்ற கிருஸ்துவ பெண் எழுத்தாளர் கூறியது”உலகில் வளர்ந்து வரும் நாகரீகத்தால் பெண்கள் ஆடைகளை ஒவ்வ்வொன்றாக குறைப்பு செய்கிறார்கள் ஆனால் இஸ்லாமியப்பென்கேலோ அங்கம் மூடும் ஆடைகளை அதிகரிப்பு செய்கிறார்கள். இதில் எனக்கு கண்களை மட்டும் காட்டி பெண்களின் அழகை மறைக்கும் இந்தப்புனிதமான ஆடையினேயே நான் இனி விரும்பி அணியப்போகிறேன் என்று கூறினார் ..ஆனால் நீங்கள் நமது ஆடை முறைமை பேரினத்திட்கு அசௌகரியத்தை ஏற்படுத்து கிறது என்று விட்டுக்கொடுக்கேச்சொல்கிரீர்கள் பேரினத்திட்கு முஸ்லிம்களின் ஒவ்வொரு அனுசஸ்டானங்களும் அசொவ்கரியத்தேயே கொடுக்கின்றது இதில் நமது விட்டுக்கொடுப்புகளால் சூட்சுமமாக அவர்களே வெற்றி அடைகிறார்கள். இருந்த போதும் எங்களை ஒவ்வொன்றாக விட்டுக்கொடுக்க சொல்லியே இந்த நாட்டில் முஸ்லிம்களைதமது மத கலாச்சாரத்துடன் அமைதியாக வாழ விடுவதில்லை என்ற கடும் போக்கு வாதிகளின் சூட்சிக்கு துனை வழிவகுக்கிரீர்கள் .

    ஹலால் விடயத்தில் விட்டுக்கொடுக்கசொன்னீர்கள் அவர்கள் வெற்றி கண்டார்கள் ,தம்புள்ள பள்ளி விடயத்திலும் அவர்களே வெற்றி பெற்றார்கள் அடுத்து பேருவளை அளுத்கம விடயத்திலும் விட்டுக்கொடுக்க சொல்லி முஸ்லிம்களின் உயிர்களையும் பொருளாதாரத்தையும் அழித்து இவர்கள் ஆதரவற்றவர்கள்.. என்ற நிலைக்கு இட்டுச்சென்றுள்ளீர்கள் இன்னும் இன்னும் பல பள்ளிகள் உடைப்பு ,பல முஸ்லீம்களின் பொருளாதார நிலையங்கள் அழிப்பு போன்ற வற்றிற்கும் இந்த விட்டுக்கொடுப்பே காரணமாக்கி விட்டீர்கள் ..”பேரினத்தை எதிர்பதால் இந்த நாட்டில் முஸ்லிம்களை அல்லல் பட வைக்கப்போகிறீர்களா?அதனால்தான் இந்த விட்டுக்கொடுப்புகள் என்கிறீர்களா?……இஸ்லாத்தில் ஒழுக்கம் ஈமானில் பாதி..இந்த வழியில் முஸ்லிம் பெண்களின் தனித்துவ இஸ்லாமிய ஆடையான’ ஹிஜாப்பில்’ கை வைக்கும் காபிர்களுக்காக எதற்காகவும் எங்கள் ஈமான்களை விட்டுக்கொடுக்க மாட்டோம்.

    .உலகில் உள்ள பெரும் கிருஸ்துவ அரசுகளுடனே நமது சகோதரிகள் போராடி வெற்றிபெற்று ஹிஜாப்பின் உன்னதத்தை உனர்த்திஇருக்கிறார்கள்..என்பதினை மனதில் வைத்து ஹிஜாப் விடயத்தில் எம்சகோதரிகள் உறுதியுடன் இருப்பார்கள் என்று நம்புகிறோம். அதே போன்று எம்மில் உள்ள புத்தி ஜீவிகளும் ஹிஜாப் ஐ விட்டுகொடுங்கள் இது பிரச்ச்னைகளுக்கான நல்லதீர்வு என்று எமது சகோதரிகளை மூளைச்சலவை செய்து தீய சக்திகளுக்கு துனை போக மாட்டீர்கள் என்றும் நம்பு கிறோம் .முஸ்லிம்களே ‘ஜும்ஆவுடைய நேரத்தில் தொழில் செய்து அதில் வரும் பணத்தை நபிகள்( ஸல்லல்லாஹுஅலைகிவஸல்லம்).அவர்கள்ஹராம் என போதித்தார்கள் என்று கூறிவிட்டு ஜும் ஆ முடிந்து போகும்போது பணம் பெற்றுக்கொண்டு போகும் மௌலவி மார்கள் இந்தப்பணம் ஹராமில்லை என்று தமது சுய நலனுக்காக மார்கத்தில் பல விட்டுக்கொடுப்பகளுடன் சில அறிஞ்சர்கள் உலவும் நாடு இது முஸ்லீம்களே விழிப்பாக இருங்கள் ….வஸ்ஸலாம்

Leave a Reply

Your email address will not be published.