ஊரடங்கு சட்டாமாவது..மண்ணாங்கட்டியாவது – அதிகாலையில் கூலாக பள்ளிவாசல்களுக்கு தீ வைத்தார்கள்

· · 824 Views

சிங்கள காடையர்களுக்கு சட்டம் விதிவிலக்கா என முஸ்லிம்கள் கேட்கின்றனர். அரசாங்கம் கண்டியில் இடம் பெற்ற வன்முறைகளை கட்டுப்படுத்துகின்றோம் என்ற போர்வையில் அவசரகாலச் சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டம் என்பனவற்றை அமுல்படுத்திய போதிலும் வெறிபிடித்த சிங்கள காடையர்கள் தமது கைவரிசையை நேற்றிரவும் காட்டியுள்ளனர்.

 

 

 

கண்டியில் நேற்றிரவும் 8 மணியிலிருந்து ஊரடங்குச் சட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்தியிருந்த வேளையிலும் இனவாத சிங்கள காடையர்கள் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் மற்றும் வர்த்தக நிலையங்களை தாக்கியுள்ளனர். அத்துடன் பல இடங்களுக்கும் வாகனங்களில் குழுக்களாக சென்று தாக்குதல்களை நடாத்த முற்பட்டுள்ளனர். அனுராத புரத்திலும் நேற்றிரவு வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். வேறு மாவட்டங்களிலும் தொடராக அச்சுறுத்தல்களை விடுத்து முஸ்லிம்களை அச்சத்திற்கு உட்படுத்தி வருகின்றனர்.

 

 

சட்டம் ஒன்று நடைமுறையில் இருக்கையில் வன்றைகளை துண்டுபவர்கள், அதில் ஈடுபடுகின்றவர்களை பாதுகாப்புத் தரப்பினர் ஏன் கைது செய்ய வில்லை? ஏன் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வில்லை என்ற கேள்விகள் தற்போது பாதிக்கப்பட்ட முஸ்லிம்களும் சமாதானத்தையும், ஒற்றுமையையும் விரும் தரப்பினரும் அரசிடம் கேட்கின்றனர்.

 

 

 

சிறுபான்மை தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்றைச் செய்தால் சட்டத்தை உடன் நடைமுறைப்படுத்தும் அரசு பெரும்பான்மை செய்தால் அதனைக் கண்டு கொள்ளாது இருப்தும் பல்லின சமுகத்தில் அவர்கள் செய்யும் துரோகத்தனமான செயற்பாடுகளாகும். பெரும்பான்மை என்ற காரணத்தினால் அவர்களை கட்டுப்படுத்தாது வன்முறையில் ஈடுபடும் இனவாத கும்பல்களின் அடாவடித்தனங்களுக்கு உடந்தையாக இருப்பது என்பது சமுகக் கண்ணோட்டத்தில் மிகவும் கவலையான ஒரு சம்பவமாகவே  உள்ளதாக புத்தி ஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

 

 

 

நாட்டில் கடந்த சில நாட்களாக சிங்கள காடையர்கள் மேற்கொண்ட அடாவடித்தனங்களால் 24வயதுடைய ஒரு இளைஞனின் உயிரை அநியாயமாக கொன்று பழியெடுத்து விட்டனர். அவர்களால்  அநியாயமான முறையில் உயிரைப் பறித்தது மட்டுமல்லாது கோடிக்கணக்கான உடமைகளையும் நாசம் செய்துள்ளனர். இவ்வாறு பாதுகாப்பை வழங்கிக் கொண்டிருந்த அரச படைகள் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே இவர்கள் செய்த அட்டூழியங்களு;ககு முஸ்லிம்கள் எங்குபோய் நீதி கேட்பது? என்று திண்டாடுகின்றனர்.

 

 

 

அவசரகாலச் சட்டம் கடுமையான முறையில் அமுல்படுத்தப்பட்டு மக்களையும்  ஊடகங்களையும் ஏமாற்றவுமே என்பது மட்டும் யதார்த்தமான உண்மையகளாகும். நேற்றிரவும்கூட பல சம்பவங்கள் இடம் பெற்ற போதிலும் பாதுகாப்புத் தரப்பினர் எத்தனைபேரை நேற்றிரவு கைது செய்துள்ளார்கள்? கைதுகள் ஒன்றுமே நடக்கவில்லை. கண்டியில் பல இடங்களில் குழுக்களாக காடையர்கள் சென்று தாக்குதல்களுக்கு முனைந்துள்ளனர். அவர்களை கைது செய்து சிறையில் அடைக்காது அவர்களை தடவி அனுப்பியுள்ளதாக அங்குள்ளவர்கள் கவலை தெரிவின்கின்றனர்.

 

 

 

அரசாங்கமும், ஜனாதிபதியும், பிரதமரும் அறிக்கைகளை மட்டுமே விடுக்கின்றனர். ஆனால் வன்முறையாளர்கள் இவர்களின் முகங்களில் கரியைப் பூசும் வகையில் தமது காடைத்தனங்களை காட்டி வருகின்றமை மிகவும் வெட்கப்பட வேண்டிய சம்பவங்களேயாகும்.

 

 

 

சாதாரணமாக குடி தண்ணீர் கேட்டும், விவசாயத்திற்கு தண்ணீர் கேட்டு போராடியவர்களை அடித்து துண்புறுத்தி கைது செய்ய முடியுமானால்  சட்டம் அமுலில் இருக்கின்ற நிலையில் சண்டித்தனமான முறையில் பள்ளிகளையும், முஸ்லிம்கiளின் வீடுகள் உள்ளிட்ட உடமைகளையும் அடித்து நொருக்கியும், எரித்தும் வன்முறைகளில் அவர்கள் செயற்படுவார்களானால் அரசாங்கம் அறிக்கைகளை விட்டுவிட்டு தூங்கிக் கொண்டிருக்கின்றதா?

 

 

 

இவ்வாறானவர்களின் சதி முயற்சிகளுக்கு முஸ்லிம்கள் விலைபோய் விடாது மிகவும் அவதானத்துடன் இருக்கின்ற நிலையில் அரசாங்கம் முஸ்லிம்களை அமைதிகாக்குமாறு கோருகின்றது. முஸ்லிம்கள் அமைதிகாத்து பொறுமைக்குமேல் பொறுமை காத்து இந்த நாட்டில் வாழுகின்றனர். ஆனால் தொடர் சம்பவங்கள் முஸ்லிம்களை வன்முறைக்கு வலிந்து இழுப்பதாகவும் முஸ்லிம்களையும் ஆயுதம் தூக்கி போராட துண்டும் ஒரு செயற்பாடுகளாகவுமே  இருக்கின்றன.

 

 

 

அரசும், ஜனாதிபதியும், பிரதமரும், பாதுகாப்பு அமைச்சும் புலனாய்வுத் துறையினரும் முழு முஸ்லிம்களையும் முழுமையாகவே ஏமாற்றி விட்டனர். துரோகமிழதை;து விட்டனர். அரசின் சகல கருத்துக்களுக்கும் கட்டுப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடாவடித்தனங்கள் விடயத்தில் அரசாங்கம் வெட்கித் தலைகுணிய வேண்டும்.

 

 

 

எனவே ஒட்டு மொத்தத்தில் முழு முஸ்லிம்களும் அரசாங்கத்தின் மீது வைத்துள்ள முழு நம்பிக்கையும் இழக்கப்பட்டுள்ளதுடன் முஸ்லிம்கள் தமது பாதுகாப்பு விடயத்தில் வேறு அரசியல் வழிமுறைகளை தேடிச் செல்ல வழிசமைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.