உலகின் முதலாவது 10 நட்சத்திர ஹோட்டல் இலங்கையில்..!! 117 மாடியில் ஒரு பிரம்மாண்ட ஹோட்டல்

· · 1154 Views

உலகின் முதல் 10 நட்சத்திர ஹோட்டல் இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

wcc

அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ள World capital center திட்டத்தில் 10 நட்சத்திர ஹோட்டல் நிர்மாணிக்கப்படவுள்ளதாக, குறித்த திட்டத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூர் மற்றும் சர்வதேச ஹோட்டல் அதிகார சபையினால் 10 நட்சத்திர சான்றிதழ் பெற்றுக்கொள்ள World capital center எதிர்பார்க்கின்றது.

அதற்கமைய உலகின் முதலாவது 10 நட்சத்திர ஹோட்டல் கட்டடம் ஒன்று இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

கொழும்பு 2இல் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ள இந்த திட்டத்திற்காக 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி அடிக்கல் நாட்டப்படவுள்ளது.

117 மாடிகளை கொண்ட இந்த திட்டம் ஆசியாவின் மிக உயரமான கட்டடமாக பெயரிப்படவுள்ள நிலையில் உலகின் மிக உயரமான கட்டடங்களுக்குள் 9ஆவது இடத்தை பிடிக்கும் என அறிவிக்கப்பட்டது.

இந்த கட்டடத்தின் உயரம் 625 மீற்றர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published.