“உலகின் முதலாவது ஸ்மார்ட் பொலீஸ் நிலையம் துபாயில் இயங்க ஆரம்பித்தது !! Fully automatic and Digital

· · 937 Views

பொலிசார் இல்லாமல் முற்றிலும் இணைய வழியில் இயங்கக்கூடிய உலகின் முதல் ஸ்மார்ட் பொலிஸ் நிலையம் துபாயில் செயற்பாட்டுக்கு வந்துள்ளது.

 

 

SPS என பெயர் சுருக்கம் கொண்ட இந்த ஸ்மார்ட் பொலிஸ் நிலையத்தில், புகார் அளித்தல், போக்குவரத்து அபராதம் செலுத்துதல், விபத்து குறித்து பதிவு செய்தல், தேவையான ஆவணங்களைப் பெறுதல் உள்ளிட்ட 60 சேவைகளை பொதுமக்கள் பெற முடியும்.

 

 

 

இந்த ஸ்மார்ட் பொலிஸ் நிலையத்தில் காத்திருப்பு பகுதி, கண்காட்சி பகுதி, சேவை பகுதி என 3 முக்கிய பிரிவுகள் உள்ளன.

 

 

 

இங்கு வரும் மக்கள், ஸ்மார்ட் பொலிஸ் நிலையத்தின் முகப்பு அறையில் வைக்கப்பட்டிருக்கும் எந்திரத்தில், தாங்கள் எந்த சேவையைப் பெற வந்திருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தி, அதற்கான டோக்கனை பெற்றுக்கொண்டு, காத்திருப்பு அறையில் காத்திருக்க வேண்டும்.

 

 

 

பின்னர் அவர்கள் காணொளிக்காட்சி மூலம் பொலிஸ் அதிகாரியை தொடர்பு கொண்டு தங்களுடைய புகாரை பதிவு செய்யலாம். இதன் மூலம் 24 மணி நேரமும் பொலிஸ் அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

 

 

 

 

ஸ்மார்ட் பொலிஸ் நிலையத்திற்கு செல்லும் மக்களின் உதவிக்காக தற்போது அங்கு 2 பொலிசார் பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர்.

 

 

 

இந்த சேவையை மக்கள் முழுமையாகப் பயன்படுத்த தெரிந்துகொண்ட பின் பொலிசார் இருவரும் அங்கிருந்து திரும்பப்பெறப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.