உலகளாவிய வர்த்தகங்களில் அதிக மோசடியைக் கொண்ட தங்க நகை வர்த்தகம்..!!தடுக்கவே முடியாதது – என்றாலும் தெரிந்து கொள்ளுங்கள்

· · 674 Views

தடுக்க முடியாமல் இருக்கும் தங்கநகை மோசடி வியாபாரம்!! நடப்பது என்ன?

#உலகில்_நடக்கும்_வியாபாரங்களில் அதிக அளவிலான மோசடி நடக்கும் வியாபாரம் தங்க நகை* வியாபாரமேயாகும்‼

 

 

*நம்மால் ஒண்ணும் பண்ணமுடியாது .*
இருந்தாலும் தெரிந்து வைத்துகொள்வோம்.‼*முதல் மோசடி:*

 

 

முதலாவது மோசடி என்னவென்றால் *கல்லுக்கும் தங்கத்தின்* விலையை வாங்குவதாகும்.

 

 

 

*நாற்பது கிராம் தங்கத்துடன் பத்து கிராம் கண்ணாடிக் கற்கள்* பதித்த நகை என்றால் அதன் விலையை எப்படி நிர்ணயிக்க வேண்டும்⁉ நாற்பது கிராம் தங்கத்துக்கு தங்கத்தின் விலையையும் பத்து கிராம் கண்ணாடிக் *கல்லுக்கு கண்ணாடிக் கல்லின் விலையையும்* தான் நிர்ணயிக்க வேண்டும்.

 

 

 

*ஆனால் ஐம்பது கிராம் தங்கத்துக்கான விலையை நம்மிடம்* வாங்கி விடுகின்றனர். *தங்கத்தின் விலையும் கல்லின் விலையும்* சமமானவை அல்ல. இரண்டுக்கும் இடையே *ஏணி வைத்தாலும் எட்ட* முடியாத வித்தியாசம் உள்ளது.

 

 

 

நாற்பது கிராம் *தங்கத்துக்கு ஐம்பது கிராம் பணத்தை வாங்குவது மோசடியாகும்.* ஐம்பது கிராம் தங்கத்துக்குப் பணத்தை வாங்கிக் கொண்டு
*கல் முத்து பவளம் இலவசம்* என்று கூறி மக்களை மேலும் மதிமயக்குகிறார்கள். *சில பேர் நாற்பது கிராமுக்கு ஐம்பது* கிராமுக்கான பணத்தை வாங்கிக் கொண்டு *கல்லுக்கு தனியாகவும்* பணத்தை வாங்கி *இரட்டை மோசடி* செய்கிறார்கள்.

 

 

 

அதே சமயம் நாம் *பழைய நகையை* விற்கச் சென்றால் *கல்லை அப்புறப்படுத்தி விட்டு* தங்கத்தை மட்டும் எடை போட்டு பணம் தருகிறார்கள். *இதற்கு நிகரான ஒரு மோசடி வேறு* எந்த வியாபாரத்திலும் இருக்குமா என்று தெரியவில்லை.

 

 

 

 

*இரண்டாவது மோசடி:*

சொக்கத் தங்கம் எனப்படும் *தனித்தங்கத்தில் நகை செய்ய முடியாது.* அதில் செம்பு கலந்தால் தான் நகை செய்ய முடியும்.ஆயிரம் கிராம் *நகை செய்ய 916 கிராம் தங்கமும் 84* கிராம் செம்பும் சேர்த்து செய்யப்படும் நகை 22 காரட் என்றும்
*916 KDM என்றும்* சொல்லப்படுகிறது.

 

 

 

 

916 கிராம் தங்கத்துடன் 84 கிராம் செம்பு சேர்த்து விட்டு *1000 கிராமுக்கும் தங்கத்தின் விலை* போடப்படுகிறது. *செம்புக்கு தங்கத்தின் விலை போடுவது மற்றொரு மோசடியாக* உள்ளது.

 

 

 

 

*மூன்றாவது மோசடி:*

தங்கத்துக்கு இன்றைய காலத்தில் *இரண்டு விலை* உள்ளது.
*ஒன்று மூலப் பொருளுக்கான விலை.* மற்றொன்று நாம் விரும்பும் வகையில்
*தயார் செய்வதற்கான* கூலியாகும்.

 

 

 

 

ஐந்து பவுன் தங்கத்தில் ஒரு நகை வாங்கினால்
*ஐந்து பவுன் தங்கத்திற்கான* விலையையும் நாம் கொடுக்க வேண்டும். அதைக் குறிப்பிட்ட *நகையாக செய்ததற்கான கூலியையும்* கொடுத்தாக வேண்டும். இது மட்டும் இருந்தால் *இதில் மோசடி* ஏதும் இல்லை.

 

 

 

 

ஆனால் ஐந்து பவுன் தங்கத்துக்கும் நம்மிடம் *பணம் வாங்கிக் கொண்டு அதற்கான கூலியையும் நம்மிடம்* வாங்கிக் கொண்டு *சேதாரம்* என்ற பெயரில் ஒரு *தொகையையும்* வாங்கிக் கொள்கின்றனர்.

 

 

 

 

அதாவது மேற்கண்ட நகையைச் செய்யும் போது
*பத்து சதவிகிதம்* சேதாரம் ஆகி விட்டது எனக் கூறி அதற்கான *பணத்தையும் நம்மிடம்* வாங்கிக் கொள்கின்றனர்.

 

 

 

 

அதாவது ஐந்து பவுனுக்கு*மட்டும் பணம்* வாங்காமல் இன்னொரு *அரை பவுனுக்கும்* சேர்த்து நம்மிடம் பணம் கறந்து விடுகிறார்கள்.

 

 

 

 

 

நகை செய்யும் போது *அரை பவுன் சேதரமாக* ஆகி வீணாகி விட்டால் அதை நம்மிடம் இருந்து *வாங்குவது முறையானது தான்.* ஆனால் தங்கத்தில் *எதுவுமே சேதாரம் ஆவது கிடையாது.*

 

 

 

 

 

நகை செய்யும் போதும் பட்டை தீட்டும் போதும் *தூள்களாக கீழே சிந்துபவை சேதாரமாகி குப்பைக்குப் போகாது.*

 

 

 

 

 

துகள்களாக உள்ளதை மீண்டும்*வேறு நகைக்கு* அவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள்.

 

 

 

 

 

இதற்கெல்லாம் சேர்த்துத் தான் *செய்கூலி வாங்கிக்* கொள்கின்றனர். *மக்களுக்குப் புரியாத டெக்னிகல்* வார்த்தைகளைப் பயன்படுத்தி
*மோசடி செய்கின்றனர்.* இதைச் செய்யாத நகை *வியாபாரிகளைக்* காண முடியவில்லை.

 

 

 

 

அது போல் பழைய நகை வாங்கும் போது *செய்கூலி சேதாரம் எல்லாம் தர* மாட்டார்கள். அது நியாயமானது தான்.

 

 

 

 

ஆனால் நாம் *கொடுக்கும் நகையில் கல்லையும் நீக்கி விட்டு* எடை போட்டு அந்த எடைக்கு உள்ள பணத்தைத் தர வேண்டும். அவர்கள் விற்பனை செய்யும் விலையைத் தர வேண்டும் என்று நாம் கூறவில்லை.

 

 

 

 

*அவர்கள் வாங்கும் விலையைக் கொடுக்க வேண்டுமல்லவா⁉* அப்படி கொடுக்க மாட்டார்கள். மாறாக *நாம் நாற்பது கிராம் நகையை விற்கச்சென்றால் அதில் கால் வாசிக்கு மேல் குறைத்துத் தான்* தருவார்கள்.

 

 

 

 

*புத்திசாலிகள்  மட்டுமே* செய்யக்கூடிய தொழில்
*தங்க நகை வியாபாரம்*

 

Leave a Reply

Your email address will not be published.