“உயிர் கொல்லி டெங்கு நோயே எனக்குள்ள மிகப் பெரிய சவால்..!! கே.ஏ.பாயிஸ் கூறுகின்றார் – மக்கள் ஒத்துழைப்பை கோருகிறார் கே.ஏ.பி

· · 1660 Views

இன்றைய நிலையில் ஆட்கொல்லி நோயான டெங்கு நோய் பரவல் நகரின் மிகப் பெரிய ஆபத்தாகும். இதற்கு நிரந்தர தீர்வொன்றைக் காணுவதற்கான வேலைத் திட்டங்களை செயல்படுத்துவதே என் முன்னுள்ள மிகப்பெரிய சவாலாகும்.

 

 

 

இவ்வாறு புத்தளம் நகர சபைத் தலைவர் கே. ஏ.பாயிஸ் தெரிவித்தார். தங்களது முதன்மையான பணிகள் எங்கிருந்து ஆரம்பிக்கும் என்ற புத்தளம் டுடேயின் கேள்விக்கே அவர் இவ்வாறு கூறினார்.

 

 

” டெங்கு நோய் செயற்திட்டம் என்ற பெயரில், அந்த நோயின் தாக்கம் அபாயகர கட்டத்தை அடைந்தவுடன் வெறுமனே ஊர் தழுவிய வேலைத் திட்டங்களில் எனக்கு உடன்பாடில்லை. இது வெறுமனே நகரை, அல்லது தத்தமது  குடியிருப்புகளை சுத்தப்படுத்தும் பணி மட்டுமே. இது யதார்த்தமானது அல்ல. நோய்க்கான மூலகாரணியை நாம்  அடையாளம் கண்டு அதற்குரிய தீர்வை எட்ட வேண்டும்.

 

 

 

உண்மையில் டெங்கு நோய் காவிகள் நமது வீட்டு நீர்த்தாங்கிகளிலேயே ( Water tank ) உற்பத்தியாகின்றன. டெங்கு நுளம்புகளின் குடம்பிப் பெருக்கம் அங்கிருந்துதான் ஆரம்பிக்கின்றது.

 

 

 

நாம் இதற்கான வேலைத் திட்டங்களை ஆரம்பிக்க இருக்கிறோம். இதற்காகவென தொழின்முறை நிபுணர்களின் உதவி பெற்றுக் கொள்ளப்படவிருக்கிறது.

 

 

 

ஓய்வுப் பெற்ற மலேரியா திணைக்கள அதிகாரிகளை தொடர்ச்சியாக வீடுகளுக்கு அனுப்பி டெங்கு நெலும்பு குடம்பிகளை கட்டுப்படுத்துவதற்கான நிகழ்ச்சியை ஆரம்பிக்க இருக்கிறோம். இதில் எமக்கு உதவி வழங்க இருக்கும் முன்னாள் மலேரியா ஒழிப்பு திணைக்கள அதிகாரிகள் ஒப்பந்த அடிப்படையில் நகர சபையோடு இணைந்து பணியாற்றுவார்கள். மத்திய அரசுடன் பேசி புதிய தொழில்நுட்பங்களையும் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்.

 

 

 

கடந்த காலங்களில் டெங்கு நோய் ருத்ரதாண்டவம் ஆடிய போது நாம் வெறுமனே கவலையுடன் பார்வையாளர்களா மட்டுமே இருக்க முடிந்தது. அந்த நிலையை நான் கண்டிப்பாக மாற்றி அமைப்பேன். இதற்கு புத்தளம் நகர மக்கள் எமக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று ஜனாப். பாயிஸ் வேண்டிக் கொண்டார்.

 

மேலும் அவர் கூறுகையில்,

 

குப்பை அல்லும் பணிகள் முன்னைய எனது ஆட்சிக் காலத்தில் போன்று சடுதியாக நடைப்பெறும். அடுத்த சில நாட்களில் கூளப் பிரச்னைக்கு முடிவு கட்டப்படும் என்றார்.

 

நமது செய்தியாளர் 

One comment

Leave a Reply

Your email address will not be published.