“உம்மாவின் பிள்ளை…உம்மாவின்…பாடசாலை…உம்மாவின் ஸ்போர்ட்ஸ் மீட் !! சின்ன சாஹிராவின் பிரம்மாண்ட ஸ்போர்ட்ஸ்

· · 835 Views

வட மேல் மாகாணத்தின் மிகப் பெரிய சிறுவர் பாடசாலையான புத்தளம் சாஹிராத் தேசியக் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் சிறப்பான முறையில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்தேறியது.

 

 

 

 

 

 

 

 

அதிபர் ஹில்மி மதார்ஷாவின்  தலைமையில் நடைப் பெற்ற இந்த போட்டிகளுக்கான அதிதிகளாக  புத்தளம் கோட்ட  கல்வி இயக்குனர் Z.A.M. சன்ஹீர், புத்தளம் நகர சபை அலுவலக மேலாளர் சபீக் முஹம்மது, புத்தளம் பெரிய பள்ளிவாசல் பிரதம நிர்வாகி  ஜனாப்,  காசிம்மிய்யா அரபுக் கல்லூரி அதிபர் அஸ்செய்க் அப்துல்லாஹ் மஹ்மூத், பாத்திமா முஸ்லிம் மகளிர் வித்தியாலய அதிபர் ரஜியா சபீயுதீன், உப அதிபர் சரீனா பாத்துமா அஜ்மல், முன்னாள் நகர சபை உறுப்பினர் வை.எம். நிஸ்தாத், பாடசாலையின் அபிவிருத்திக் குழுத் தலைவர் பைநோஸ், உதைப்பந்தாட்ட நிபுணர் ஜே.எம். ஜவ்சி  ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

 

 

 

 

கடந்த வருட இல்ல விளையாட்டின் போது  அதிபர் ஹில்மியும் முன்னாள் நகர சபைத் தலைவர் பாயிசுக்கும் லடாய் ஏற்பட்டதால்அதிபர் ஹில்மி அரசியல்வாதி பெருந்தகைகளை விழாவுக்கு அழைக்காமல் மிக ராஜ தந்திரமாக விளையாட்டுப் போட்டிகளை நடாத்தி முடித்து விட்டார்.

 

 

 

 

 

அவருக்கு ஏதுவாக  சேர்மனாக யாரும் பெயர் குறிப்பிட்டும் இருக்கவில்லை.கரைச்சலும் இல்லை.இவர்களை கூப்பிட்டு அப்புறம் அவர்களுக்கு பேன்ட் அடித்து அழைத்து வருவதிலேயே நேரமெல்லாம் போய்விடும்.

 

 

 

 

 

பாடசாலையின் மொத்த வளங்களையும் உபயோகித்து 3 வார கால முயற்சியின் அடைவாக இந்த விளையாட்டுப் போட்டிகள் பிரம்மாண்டமாக காட்சியளித்தன. அதிபர் , ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் பெற்றோரின் உழைப்பு அந்த பிரம்மாண்டத்தில் தெரிந்தது.

 

 

 

கண்களைக் கொள்ளைக் கொள்ளும் பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகளில் மாணவ மாணவிகள் கலக்கினார்கள். மைதான போட்டிகளுக்கு அப்பால் இல்லங்களின் கண்கவர் டிரில் மற்றும் உடற்பயிற்சி நிகழ்ச்சிகள் கண்ணுக்கு விருந்து.

 

 

ஒவ்வொரு பெற்றோரும்  தங்கள் பிள்ளைகளின் நிகழ்ச்சிகளின் போதும் குதூகலித்து மகிழ்ந்தார்கள். ஆரவாரங்களுக்கும் கழிப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் சின்ன சாஹிரா மைதானம் காட்சியளித்தது.

 

 

 

இல்லங்களின் நிறங்களில்  நீல நிற இல்லமான சபா இல்லமே மிக  அழகாக காட்சியளித்ததாக பலரும் குறிப்பிட்டார்கள். அந்த இல்லத்தின் நீல கலரில் மாணவ, மாணவிகள் மிக நேர்த்தியாகவும், அழகாகவும் காட்சி அளித்தார்கள்.

 

 

 

சிகப்பு கலர் இல்லமும் பரவாயில்லை. கொடிப் பள்ளி பச்சைக் கலரில்  இருந்த இல்லமும் , மாரி அம்மன் மஞ்சள் கலரில் இருந்த இல்லமும் பெரிதாக கவர்ச்சியாக இருக்கவில்லை. மஞ்சள்,மற்றும் பச்சைக் கலர்களில் மனத்தைக் கவரும் சுண்டி இழுக்கும் பிரைட்டான வெரைட்டிகள் உண்டு.இதற்கான வர்ண நிபுணர்களிடம் இந்த இல்ல பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கேட்டிருக்கலாம்.

 

 

மாறுவேடப்போட்டிகளில் சின்னச் சிறிய மாணவர்களின்  பிரயாசை வெளிப்பட்டது. இத்தியாசமான கற்பனைகளால் அந்த நிகழ்ச்சியும் தனியுருவில் கவனத்தை கவர்ந்தது.பாடசாலையின் மாணவிகளும் மாணவர்களுக்கு சவால் விடுவதுப் போன்று சமாமமாக  தமது திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

 

 

 

அங்கிருந்த ஆண் அப்பாவி சமூகம் தான் மிகவும் இக்கட்டில் மாட்டியது. சின்ன சாஹிராவின் தாய்மார் படையணிகள் பாடசாலையின் முழு இடங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்ததால் ஆண்கள்  அனைவரும் பாடசாலையின் மெயின் ஹோல்  மூலையில் ஒடுக்கப்பட்டிருந்தார்கள். இடத்தை கொடுத்தால் மடத்தைப் பிடித்தகதைத்தான்.வீட்டிலுள்உம்மா..சின்னம்மா..பெரியம்மா..உம்மம்மா..வாப்பிச்சாபெத்தமா என்று  சாரி சாரியாக சூரியன் அடையுமட்டும் வந்து கொண்டே இருந்தார்கள்.

 

 

 

 

இத்தனை பெரிய விளையாட்டுப் போட்டிகளுக்கு அந்த சிறிய மைதானம் பொருத்தமாகப் படவில்லை. சாஹிரா தேசியக் கல்லூரி மைதானத்தையோ, அல்லது  கறுப்புத் தரவையையோ பெற்றிருக்கலாம்.

 

 

 

 

புத்தளத்தின் மிகப் பெரிய விளையாட்டு விழா எல்லா விமர்சனங்களையும் மீறி வெகு சிறப்பாக நடைப் பெற்றதற்கு அந்த பாடாசாலை நிவாகத்திற்கு ஒரு “சொட்டு ” கொடுக்கலாம்.

 

ரஸீம் மஹ்ரூப்

 

படங்கள் விஷேட நன்றி : பர்வீஸ் விஜிலி  ( Paper house studio )

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published.