உப்பு இறக்குமதியை நிறுத்த திட்டம் !! அமைச்சர் ரிஷாத் அறிவிப்பு – செய்கை காலத்தில் மழை பெய்தால் என்ன செய்வீர்கள் அமைச்சரே..?

· · 649 Views

அடுத்த இரண்டு வருடங்களில் உப்பு இறக்குமதியை நிறுத்துவதற்கு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக  கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மன்னார் மாந்தை உப்பு தொழிற்சாலையை அபிவிருத்தி செய்வது குறித்து ஆராய்வதற்காக சென்றிருந்த போது தெரிவித்துள்ளார்.அடுத்த இரண்டு வருடங்களில் உப்பு இறக்குமதியை நிறுத்துவதற்கு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக  கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மன்னார் மாந்தை உப்பு தொழிற்சாலையை அபிவிருத்தி செய்வது குறித்து ஆராய்வதற்காக சென்றிருந்த போது தெரிவித்துள்ளார்.

 

 
யுத்த காலத்தில் மூடப்பட்டிருந்த ஆணையிறவு மற்றும் மன்னார் உப்பு தொழிற்சாலையை அபிவிருத்தி செய்து உப்பு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். அதன் ஊடாக உப்பு இறக்குமதியை நிறுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

 

 
அத்துடன் 2017ம் ஆண்டு இதுவரையில் மன்னார் தொழிற்சாலையினுள் 6000 தொன் உப்பு மற்றும் ஆணையிறவு தொழிற்சாலையில் 500 தொன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.