உதவி பொலீஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்று ( ASP ) ஓய்வுப் பெற்றார் பாலித ரங்கே பண்டாரா

· · 855 Views

இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவை உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு வழங்கி, ஓய்வுபெறும் பரிந்துரையை தேசிய பொலிஸ் ஆணைக்குழு முன்வைத்துள்ளது.

 

 

2000ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் திகதியில் இருந்து மீண்டும் அவரை சேவையில் இணைத்து, 2000ஆம் ஆண்டு ஓகஸ்ட் 27ஆம் திகதி முதல் அமுலக்கு வந்த வகையில், உதவி பொலிஸ் அத்தியட்சகர் தரத்திற்கு பதவி உயர்வ வழங்குமாறு ஆணைக்குழு, சட்டம் ஒழுங்கு அமைச்சுக்கு அனுப்பிவைத்துள்ள பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

அமைச்சரவை எடுத்த கொள்கை ரீதியான தீர்மானத்திற்கு அமைய இந்த பரிந்துரை வழங்கப்பட்டுள்ளதுடன், ஆணைக்குழுவின் செயலாளர் நேரடியாக அமைச்சிற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.