உடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகள்

· · 456 Views

Vegetableவாழைக்காய் மலச்சிக்களை தீர்க்ககூடியதாகும். ஆனால் இதில் வாயுவை தூண்டும் தன்மை இருப்பதால் பூண்டை அதிகமாக உபயோகித்து சமைக்க வேண்டும்.

வாழைப்பூ உடலுக்கு புத்துணர்வையும் தெம்பையும் தருவதுடன் இரத்த சோகை வராமலும் தடுக்க கூடியது. இதில் விட்டமின் ஏ, பி, சி, போலிக் அமிலம், இரும்புச் சத்தும் உண்டு.

வாழைத்தண்டில் விட்டமின் பி, சி, பாஸ்பரஸ், இரும்புச் சத்து, கால்சியம், இரும்புச் சத்தும் அடங்கியுள்ளது. சிறுநீரகத்தின் செயல்பாடுளை சீராக்கி சிறுநீரக கல் அடைப்பை தடுக்க வல்லது.

சேப்பங்கிழங்கு பற்களையும் எலும்பையும் உறுதிபடுத்தக்கூடியது. இதில் பாஸ்பரஸ், கால்சியம் அதிகம் உள்ளது.

பாகற்காய் நன்கு பசியை தூண்டுவதுடன் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தக்கூடியது. அத்துடன் இரும்புச்சத்து பாஸ்பரஸ், விட்டமின் ஏ, பி, சி யும் அடங்கியதாகும்.

பீட்ருட் மலச்சிகளை போக்கி இரத்த சோகையை சரிப்படுத்துவதுடன் பொட்டாசியம், சோடியம், கால்சியம் சத்துக்களை கொண்டது. இதன் சாற்றை தொடர்ந்து உதட்டில் பூசி வர உதடு சிவப்பு நிறத்தை அடையும்.

சுரைக்காயில் இரும்பு சத்து, புரதம், கால்சியம், விட்டமின் பி, பாஸ்பரஸ் என்பன இருப்பதுடன் இது உடல் சோர்வை நீக்கி உடலுக்கு புத்துணர்வை கொடுக்கும்.

சுண்டைக்காயானது இரும்பு சத்து, கால்சியம், புரதம் கொண்டதாகும். இதை உண்பதன் நன்மை உடல் வளர்ச்சி தூண்டப்படுதுவதுடன் வயிற்றுப் புழுக்களை கொள்ளக் கூடியது.

கத்தரிக்காயில் பாஸ்பரஸ், இரும்பு சத்து, கல்சியம் என்பன காணப்படுவதுடன் இது செரிமான சக்தியை தூண்டி பசியை உண்டாக்க கூடியது.

குடை மிளகாய் அஜீரணக் கோளாறை நீக்கி செரிமான சக்தியை தூண்டுவதுடன் கால்சியம், விட்டமின் ஏ,பி, சி, இரும்பு சத்து என்பன உள்ளது.

அவரைக் காயில் நார்சத்து, புரதம், காணப்படுவதுடன் மலச்சிக்கலை போக்கக்கூடியது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து அதிகரித்து தேகத்தை பலப்படுத்தும்.

கேரட் இரத்ததை சுத்தப்படுத்தி உடலுக்கு உறுதியை கொடுக்க கூடியது. (LS Tech)

Leave a Reply

Your email address will not be published.