உங்கள் பக்கத்தை நீங்கள் பார்க்கவும் நான் என் பக்கத்தை பார்த்துக் கொள்கிறேன்’!! அமைச்சரவை மாற்றம் பற்றி ஜனாதிபதிக்கு பிரதமர் அறிவிப்பு

· · 526 Views

எதிர்வரும் சில நாட்களில் மேற்கொள்ளப்படவுள்ள அமைச்சரவை மாற்றம் நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது. இதன்போது பிரபல அமைச்சர்களின் அமைச்சுகள் மாற்றப்படவுள்ளதாகவும் இதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் இணங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் சீனா சென்றுள்ளதால் அவர் நாடு திரும்பிய பின் அமைச்சரவை மாற்றம் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.

th (5)

இந்நிலையில் ஜனாதிபதிக்கு அழைப்பெடுத்த பிரதமர் ‘உங்கள் பக்கத்தை நீங்கள் பார்க்கவும் நான் என் பக்கத்தை பார்த்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

எனினும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சர்கள் ஜனாதிபதிக்கு கொடுக்கும் அழுத்தத்திற்கு ஜனாதிபதி தலைசாய்ப்பதால் ஐதேக உறுப்பினர்கள் அதிருப்தியில் உள்ளனர். தன்னை ஜனாதிபதியாக்க ஐதேக உறுப்பினர்கள் பாடுபட்டதை ஜனாதிபதி இரண்டு வருடங்களில் மறந்து விட்டதாக ஐதேக முக்கியஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

அமைச்சரவை மாற்றம் செய்யும் வரை ஜனாதிபதி அமைச்சரவை கூட்டத்தை பிற்போட்டுள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களின் அழுத்தத்தின் காரணமாக ஜனாதிபதி இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.