” உங்கள் கட்சி வெற்றியா..? இந்த கலப்பு முறை தேர்தலில் வெற்றியாளர்கள் எப்படி தெரிவாவார்கள்..?” தேசப்பிரிய விவரமாக சொல்கிறார் கேளுங்கள் – அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை

· · 830 Views

கலப்புத் தேர்தல் முறை என்றால் என்ன என்பது குறித்து அநேகமானோருக்கு தற்போது பல சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.

 

 

இதுகுறித்து தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவிடம் நாம் விசேட நேர்காணல் ஒன்றை நடத்தினோம். மிகவும் வேலைப்பளு மிக்க இந்தத் தருணத்திலும்  தேர்தல் முறை குறித்து விளக்கமளித்தார்.

 

 

 

”புதிய முறையில் உள்ளுராட்சித் தேர்தல் நடத்தப்படும் போது எந்த முறையில் இந்தத் தேர்தல் நடத்தப்படுகின்றது என்ற கேள்வி அநேகருக்கு இருக்கிறது. இந்த முறையில் தொகுதிவாரி முறையும் இருக்கிறது விகிதாசார முறையும் இருக்கிறது. 60 வீதம் தொகுதியும், 40 வீதம் விகிதாசாரம் என்று கூறினாலும் 100 வீதம் விகிதாசார முறையே. அதாவது தொகுதியில் 8 உறுப்பினர்கள் தெரிவாகின்றனர்.

 

 

 

பட்டியலில் 8 பேர் என்றால் கிடைக்கும் வாக்குகளை இருபதினால் பிரிக்கப்படும். அப்படியாயின், ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகளைப் பிரித்து அதன்படி கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களுக்குமான ஆசனங்கள் வழங்கப்படும்.

 

 

 

 

இதன்படி ஒவ்வொரு தரப்பும் பெற்றுக்கொள்ளும் வாக்குகளின் விகிதாசாரத்திற்கமைய ஆசனங்களைப் பெற்றுக்கொள்வர். அத்துடன், தொகுதியில் பெறப்படும் வாக்குகளை எண்ணி, அதில் அதிகம் பெற்றுக்கொண்டவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

 

 

 

இதன்படி அனைத்துத் தொகுதிகளுக்கும் ஒரு உறுப்பினர் தெரிவுசெய்யப்படுவார். அத்துடன், அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு விகிதாசார முறையில் ஆசனங்கள் வழங்கப்படும். இதுதான் கலப்புமுறையிலான தேர்தல் என்றழைக்கப்படுகிறது. தொகுதிவாரியாக ஒரு உறுப்பினர் தெரிவுசெய்யப்படுவார்.” என்று தெரிவித்தார்.

 

 

 

 

 

தேர்தல் முறைமை குறித்து மேலும் பல தகவல்களை எமக்களித்த தேர்தல் ஆணையாளர்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published.