உக்குரஸ்பிடிய, வியாங்கல்ல, அகலவத்த , களுத்தர முஸ்லிம் கிராமங்களுக்கு பயமுறுத்தல் !! மொட்டு தலைவர் G.L. பீரிசிடம் முறைப்பாடு

· · 546 Views

இம்முறை உள்ளுராட்சி சபைத் தேர்தலில் பிரதான இரண்டு கட்சிகளையும் பின்தள்ளி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆதரவளிக்க ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றியீட்டியது.

 

 

 

இதனால் இலங்கை அரசியல் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

கடந்த அரசாங்கக் காலத்தில் நாடு முழுவதும் முஸ்லிம் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி, சொத்துக்களைத் தேசப்படுத்தி, முஸ்லிம் மக்கள் மீது பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் சம்பவங்கள் நடந்தன.

 

 

 

இதுகுறித்து ஆராய்ந்த ஶ்ரீலங்கா முஸ்லிம் பேரவை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். கண்டி, களுத்துறை, அகலவத்த உள்ளிட்ட சில பிரதேச சபைகளில் முஸ்லிம் மக்களுக்கு பொதுஜன பெரமுணவின் ஆதரவாளர்கள் இடையூறு செய்ய ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

இதன்மூலம் தெரியவருவதாவது, அவர்கள் கொண்டு நடத்திய ஆட்சி மக்களினால் ஒருமுறை நிராகரிக்கப்பட்ட நிலையில், இதன்மூலம் அவர்கள் கற்றுக்கொள்ளவில்லை என்பதேயாகும்.

 

 

 

 

மீண்டும் இவ்வாறான ஒரு மோசமான நிர்வாகத்தை அல்லது ஆட்சியை பிரதேச ரீதியாக கொண்டுசெல்ல ராஜபக்சக்களின் ஆதரவாளர்கள் முயற்சிக்கின்றனரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

 

 

 

முஸ்லிம் பேரவை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தைக் கீழே காணலாம்.

 

 

 

muslim

Leave a Reply

Your email address will not be published.