ஈரானின் ” ஜோல்னா பலானியை “கொல்லுபவருக்கு 1 மில்லியன் டொலர் பரிசு..!!ISIS அறிவிப்பு – இவங்களையா கொல்லச் சொல்றீங்க..?

· · 1553 Views

சிரியாவில் அரசு ராணுவத்துக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே இறுதிக்கட்ட போர் நடைபெற்று வருகிறது. போதாக்குறைக்கு, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் பல தாக்குதல்களை நடத்தி மக்களைக் கொன்று குவித்துவருகிறது. இந்த நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு எதிராகப் போராடிவரும் 23 வயதான இளம்பெண் ஜோல்னா பலானியை கொல்பவருக்கு ஒரு மில்லியன் டாலர் அன்பளிப்பு அளிப்பதாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் அறிவித்துள்ளது.

யார் இந்த ஜோல்னா பலானி… எதற்காக இவர் தலைக்கு ஒரு மில்லயன் டாலர் பரிசு வழங்க வேண்டும்?

ஜோல்னா

ஜோல்னா பலானி, ஈரான் நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர். இவரது குடும்பம் பல ஆண்டுகளுக்கு முன்பு டென்மார்க் நாட்டில் குடியேறியது. பின், அங்கேயே அகதிகள் உரிமைப் பெற்று கல்லூரியில் படித்து வருகிறார். பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு எதிராகப் போராடுவது மட்டுமல்லாமல்… ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துக்கு எதிராகவும் ஆயுதமேந்தி போராடி வருகிறார். இதனால் மத்திய கிழக்குப் பகுதிகளில் ஆயுதமேந்தி போராடிக்கொண்டிருக்கும் குர்திஸ் இயக்கத்தோடு இணைந்து ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துக்கு எதிராகவும் போராடி வருகிறார். ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் உலகின் எந்த மூலையிலும் செயல்படக் கூடாது என்பதே இவரின் முக்கிய நோக்கம்.

joalnna-palani1_16084

டென்மார்க்கில், தனது கல்லூரிப் படிப்பை நிறுத்திவிட்டு சிரியாவுக்குச் சென்று போராட்டத்தைத் தொடர நினைத்த இவர், சிரியா எல்லைப் பகுதிகளில்… அந்த நாட்டு ராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டார். பின், கடந்த 2015-ம் ஆண்டு டென்மார்க் அரசு, ஜோல்னா பலானியிடம் இருந்த பாஸ்போர்ட் மற்றும் அடையாள அட்டையை பறிமுதல் செய்து தங்கள் நாட்டுக்கு அழைத்துச் சென்றது. சட்ட விரோதமாக நாட்டைவிட்டுத் தப்பிச் சென்றதாலும், போராட்டக் குழுவோடு இணைந்து செயல்பட்ட குற்றத்துக்காகவும் டென்மார்க் போலீஸாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. போலீஸார், ஜோல்னாவைப் பற்றித் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். எனினும், ஜோல்னாவின் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் உண்மையாகும் பட்சத்தில் அவருக்கு டென்மார்க் அரசால் கடுங்காவல் தண்டனை வழங்கப்படும். இருப்பினும்… ஜோல்னா, போலீஸாரின் கட்டுப்பாட்டில் இருந்துகொண்டே ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துக்கு எதிராகப் போராடியும், தொடர்ந்து குரல் கொடுத்தும் வருகிறார்.

இப்படி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துக்கு எதிராகப் போராடிவரும் ஜோல்னா பலானிக்கு எதிராக, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ‘‘எங்களுக்கு எதிராகக் குரல்கொடுத்தும், போராடியும் வரும் ஜோல்னா பலானி கொல்லப்பட வேண்டியவர். ஜோல்னாவை, கொலை செய்பவருக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசாக வழங்கப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் அறிவித்திருக்கும் இந்த அறிவிப்பானது, தீவிரவாதிகளின் மத்தியில் வரவேற்பையும், ஜோல்னாவின் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் கோபத்தையும் ஏற்படுத்தயுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.