இழுத்து மூட ஆயத்தம்..!! E.A.P. எதிரிசிங்க நிறுவனம் மத்திய வங்கியின் கீழ் -அரசாங்கம் அதிரடி

· · 461 Views

ஈ.ஏ.பி. வர்த்தக நிறுவனத்திற்குச் சொந்தமான ETI Finance Ltd மற்றும் Swarnamahal Financial Services PLC நிதி நிறுவனங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மத்திய வங்கியின் கீழ் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

 

 

இதற்கமைய குறித்த நிறுவனங்களை நிர்வகிப்பதற்காக முகாமைத்துவ சபையொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

 

 

அத்துடன் நீண்டகால வைப்புக்களை வரையறுத்துள்ளதுடன், நீண்டகால வைப்புக்களை 06 மாத காலத்திற்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

 

வைப்பிற்கு ஏற்ற வட்டிவீதத்தைச் செலுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

 

 

ஜனவரி 1ஆம் திகதி மத்திய வங்கியினால் குறித்த இரண்டு நிதி நிறுவனங்களும் குறைபாடுகளுடன் இயங்கி வருவது குறித்து ஆராயப்பட்டுள்ளது. இதனால் வைப்பாளர்கள், வடிக்கையாளர் ஆகியோரைப் பாதுகாப்பதற்காக மத்திய வங்கி உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

 

 

 

2011 இலக்கம் 42 என்ற நிதி வர்த்தக சட்டத்திற்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

 

 

 

குறித்த நிறுவனங்கள் தொடர்பாக மத்திய வங்கி எடுத்துள்ள தீர்மானங்கள் குறித்து மேலதிக தெளிவுபடுத்தல்கள் வேண்டுமாயின் அதனை தொலைபேசி ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

011 2477258 மற்றும் 011 2477229.தொலைபேசி இலக்கங்களில் இந்த விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

 

 

 

இதற்கான ஊடக அறிக்கையை மத்திய வங்கியின், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களைக் கண்காணிக்குப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.