இலங்கை வங்கியில் உத்தியோகம் வழங்குவதற்கு 1500 பேரிடம் 50,000 ரூபா பெறப்பட்டுள்ளது !! புதிய சர்ச்சையால் பரபரப்பு

· · 551 Views

இலங்கை வங்கியில் உதவியாளர்கள் 1500 பேரை சேர்த்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இணைத்துக் கொள்ளப்படுபவர்களிடம் தலா 50 ஆயிரம் ரூபா விகிதம் ஐக்கிய தேசியக் கட்சி உயர்மட்ட அரசியல்வாதிகள் லஞ்சம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

 

ஐக்கிய தேசியக் கட்சி அரசியல்வாதிகள் வழங்கும் பட்டியலின் படியே இலங்கை வங்கிக்கு உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

 

 

இலங்கை வங்கியில் உதவியாளர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சையை இலங்கை வங்கியே நடத்துகின்ற போதிலும், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் பதவி வகிக்கும் அரச நிறுவனத்தின் ஊடாகவே இது மேற்கொள்ளப்படுகிறது.

 

 

 

 

 

இந்த நியமனங்களை வழங்குவதற்காக அமைச்சின் அதிகாரிகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் அதிகாரிகளும் இணைந்து விண்ணப்பங்களை விநியோகித்துள்ளதாகவும், மூன்று முதல் ஐந்து லட்சம் வரையில் இவர்கள் லஞ்சம் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

 

 

 

இதுகுறித்து இலங்கை வங்கி நிர்வாகத்திற்கு தற்போது முறைப்பாடுகள் தொடர்ந்து கிடைத்த வண்ணம் இருப்பதாக தெரியவருகிறது.

 

 

 

 

 

இலங்கை வங்கியில் கடந்த காலங்களில் மேல் மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரையில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக லங்கா நியூஸ் வெப்பிற்கு தகவல் கிடைத்துள்ளது. இவற்றை ஒவ்வொன்றாக வெளியிட நாம் தயாராகி வருகின்றோம்.

 

 

 

 

 

இலங்கை வங்கியின் தலைவர் பதவிக்காக புதிய ஒருவர் விரைவில் நியமிக்கப்படவுள்ளதாகவும் இலங்கை வங்கியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published.