இலங்கை முஸ்லிம்கள் மிகவும் நல்லவர்கள்..!! கொண்டாடுகிறது பொது பல சேனா அமைப்பு

· · 970 Views
(ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்)

புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டாலோ அல்லது திருத்தங்கள் மேற்கொண்டாலோ ஐக்கிய இலங்கையே முஸ்லிம்களின் நிலைப்பாடு என முஸ்லிம் தரப்பு திட்டவட்டமாக அறிவித்துள்ளதுடன், இதுதொடர்பில் பகிரங்க அறிக்கையொன்றை வெளியிடவும் தீர்மானித்துள்ளது.

பொதுபல சேனா முஸ்லிம் தரப்பு 5 ஆவது சுற்றுப் பேச்சில் (நவம்பர் 2 ஆம் திகதி, வியாழக்கிழமை இரவு) முக்கிய கலந்துரையாடலாக இரு அமைந்திருந்தது.
ஐக்கிய இலங்கைக்குள், ஒற்றையாட்சி முறையே என முஸ்லிம்கள் நம்பிக்கை கொண்டிருப்பதாக இதன்போது முஸ்லிம் தரப்பினர் சுட்டிக்காட்டினர்.
இதன்போது குறிக்கிட்ட பொதுபல சேனா, முஸ்லிம்களின் நிiலைப்பாட்டை பகிரங்கப்படுத்த முடியுமா என இதன்போது கேள்வியெழுப்பியுள்ளது.
இதற்கு பதில் வழங்கியுள்ள முஸ்லிம் தரப்பு, சகல முஸ்லிம்களினதும் நிலைப்பாடு இதுவே என்றும் ஏனைய முஸ்லிம் அமைப்புக்களையும்  இணைத்துக்கொண்டு தாம் இதுபற்றிய விரிவான அறிக்கையை வெளியிடுவதாக குறிப்பிட்டுள்ளது.
முஸ்லிம் தரப்பின் ஐக்கிய இலங்கை மற்றும், ஒற்றையாட்சி என்ற அறிவிப்பை கேட்டவுடன் பொதுபல சேனா தரப்பு மட்டற்ற மகிழ்ச்சியடைந்தாகவும் அறியவருகிறது.

Leave a Reply

Your email address will not be published.