இலங்கை கிரிக்கட் சபை சந்திக்க ஹதுருசிங்கவுக்கு மாதம் 38 லட்சம் சம்பளம் வழங்க அதிரடி முடிவு !! இலங்கை ஏழை நாடென்று யாரோ சொன்னாங்களே..?

· · 494 Views

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிலையான பயிற்சியாளராக சந்திக ஹதுருசிங்கவை நியமிக்கவும், அவருக்கு மாதாந்த சம்பளமாக 38 அல்லது 39 இலட்சத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

 

இது குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபாலவிடம் அத தெரண வினவியது.

 

 

 

தாம் இந்த விடயம் குறித்து சந்திக ஹதுருசிங்கவிடம் கலந்துரையாடியதாகவும், எனினும், அவரது சம்பளம் குறித்து தீர்மானிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

இதேவேளை, சந்திக ஹதுருசிங்க தவிர்த்து வேறு மூவரிடமும் இது குறித்து கலந்துரையாடி வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.