“இறைச்சி” சம்பந்தமான வாக்குவாதத்தில் அம்பாறையில் நொறுங்கிய முஸ்லிம்களின் உடைமைகள்!! அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வருகிறார் ஹக்கீம்

· · 542 Views

அம்பாறையில் காசிம் ஹோட்டல் என்ற உணவகத்தில்  இறைச்சி தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு கலவரமாக மாறியதில் இதுவரை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மூன்று முஸ்லிம் உணவகமும்இ காத்தான்குடி நபருக்கு சொந்தமான பேக் கடை ஒன்றும்இ அம்பாறை ஜும்ஆ பள்ளிவாயல் ஒன்றும் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.

 

 

இதன் எதிரொலியாக அம்பாறை ஜும்ஆ பள்ளிவாயல் சுற்று மதில்கள் உடைக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளிவாயல் சேதப்பட்டுத்தப்பட்டுள்ளதாகவும் வாகனம்கள் சேதப்பட்டுத்தப்பட்டுளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

தற்போது நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக  அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இந்த இன துவேஷ மோதல் சம்பந்தமாக  இன்று நடைப்பெரியவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஜனாதிபதியிடம் முறையிடுவார் என  அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

 

 

 

ஏற்கனவே இது சமபந்தமாக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதூர்த்தீன் தனது கூடிய அவதானத்தை செலுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published.