இரவில் முஸ்லிம்களுக்கு எதிரான அநியாயங்களை செய்துவிட்டு, விடிந்ததும் மகிந்த மீது பழியை போடுகின்றனர் !! குற்றச்சாட்டு உண்மையோ..?

· · 373 Views
இரவு நேரங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து செயற்பாடுகளையும் ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு, காலையில் எழும்பி மஹிந்த நாமம் கொண்டு, அதனை மறைக்க முயற்சிப்பதை விட கையாலாகாத தனம் வேறு எதுவுமில்லை என ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.
 செய்தி சேவை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அம்பாறை தாக்குதல் சம்பவம் தொடர்பில் கருத்து  தெரிவிக்கையில்..
இந்த ஆட்சியில் என்ன தவறு நடைபெற்றாலும், அதற்கு மஹிந்த என்ற நாமத்தின் மீது பிழைகள் அனைத்தையும் பூசி, இவ்வாட்சியாளர்கள் தப்பிக்க முயல்கின்றனர்.
இவர்களின் இந்த பிரச்சாரம் முஸ்லிம்களிடத்தில் மிக அதிகமான இடம்பெறுகிறது. அண்மையில் அம்பாறை நகரில் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு செயற்பாடு நடைபெற்றிருந்தது. இதனையும் எங்கள் தலையில் போடும் வகையில் கருத்து தெரிவித்து வருவதை அவதானிக்க முடிகிறது.
இதுவரை காலமும் இவ்வரசினர் அலுத்கமை கலவரத்தை நியாபகப்படுத்தி படத்தை ஓட்டினார்கள். அதன் பிறகு கிந்தோட்டை, அம்பாறை என இரு பெருங் கலவரங்கள் நடைபெற்று முடிந்துவிட்டன. எங்கள் காலத்தில் இடம்பெற்றதையும் நாங்கள் தான் செய்தோமாம் , அவர்கள் காலத்தில் இடம்பெற்றதையும் நாங்கள் தான் செய்தோமாம். இரவு நேரங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து செயற்பாடுகளையும் ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு, காலையில் எழும்பி மஹிந்த நாமம் கொண்டு மூடி மறைக்க பார்க்கின்றார்கள்.
இது தான் நாம் கூறுவது. அளுத்கமை, கிந்தோட்டை, அம்பாறை உட்பட இன்னும் முஸ்லிம்களுக்கு எதிராக என்னவென்ன சம்பவங்கள் எல்லாம் இடம்பெற்றதோ, அத்தனையையும்  சீரான விதத்தில் விசாரணை செய்து, நீதியை நிலை நாட்டுங்கள்.
அதற்கு நாங்கள் ஏதேனும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமாக இருந்தால், பூரண மனதுடன் ஒத்துழைப்பு வழங்கவும் தயாராக உள்ளோம். மிகக் கடுமையான தண்டனைகளோடு, கைது செய்யப்படுகையில் அனைத்து உண்மைகளும் வெளிப்படும். இந்த ஆட்சியாளர்கள் ஒரு போதும் குற்றவாளிகளை கைது செய்ய மாட்டார்கள் என்ற விடயமும் எங்களுக்கு தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.